Thursday , 23 January 2025
review

Gladiator 2 அப்படி என்னதான் பண்ணி இருக்காங்க.. திரை விமர்சனம்!!

கிளாடியேட்டர் 2 திரைப்படத்தின் திரைவிமர்சனம்.

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக எதையும் சொல்லக்கூடிய அளவு உள்ளதா? என்று கேட்டால் இன்னும் அந்த இடத்தை எந்த ஒரு மொழி படங்களும் எட்டிப் பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

அந்த வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாமல் பெரும் பொருட் செலவில்  எடுக்கப்படுகின்ற இந்த ஹாலிவுட் படங்களை பார்க்க மக்கள் ஆவலாக இருப்பது இயல்பு தான். 

தற்போது ஹாலிவுட் திரை உலகின் மிக வயதான இயக்குனராக இருந்தாலும் இன்னும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்று சொல்லக்கூடிய வகையில் தனது சிறப்பான பணியை செய்பவர் ரெட்லி ஸ்காட்.

இவர் இயக்கத்தில் 2000 ஆக ஆண்டு வெளி வந்த மெகா ஹிட் படம் பல ஆஸ்கார் விருதுகளை குவித்தது. அந்தப் படம் தான் கிளாடியேட்டர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 24 வருடம் கழித்து இன்று வெளி வந்துள்ளது. 

இந்தப் படத்தின் கதை எப்படி உள்ளது என்ற திரை விமர்சனத்தை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். 

படத்தின் ஆரம்பத்திலேயே மேக்ஸிமஸ் இறந்து 16 வருடம் கழித்து இரண்டு பொறுப்பற்ற வாலிபர்களின் கையில் சிக்கி ரோம் நகரம் சீரழிந்து வருகிறது‌. 

ரோம் நகர மக்கள் ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நேரத்தில் கூட தன் தளபதியை அனுப்பி பல ஊர்களை கைப்பற்ற சொல்கிறார் அந்த இரண்டு இளவரசர்கள். 

அந்த வகையில் தளபதி ஆப்பிரிக்கா நோவா பகுதியை கைப்பற்ற அங்கிருந்து லூசியஸ் ரோம் நகரத்திற்கு கைது செய்து கொண்டு வர அங்கு அவரை டென்சில் வாஷிங்டன் கிளாடியேட்டராக தேர்வு செய்து சண்டைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அப்படி சென்ற இடத்தை தான் அம்மா இளவரசி அப்பா இருந்த மேக்ஸிமஸ் என்று தெரிந்த பிறகு அந்த இரண்டு பொறுப்பற்ற இளவரசர்களும் லூசியஸ்க்கு நடக்கும் யுத்தமே மீதி கதையாக உள்ளது. 

கிளாடியேட்டர் என்றால் போரில் தோற்று சரணடைந்த நாடுகளை சேர்ந்த வீரர்களை ரோம் நகரின் பிரமாண்ட சண்டை களத்தில் சண்டையிட செய்யவிட்டு அதை வேடிக்கை பார்த்து அரசர்களும் ரோம் மக்களும் மகிழ்வார்கள். 

அப்படித்தான் சொந்த நாட்டிலேயே நேர்மையாக இருந்து துரோகம் இழைக்கப்பட்டு கிளாடியேட்டர் மாறிய மேக்சிமம் மகன் லூசியஸ் கதை தான் இது. 

இதை லூசிய சிறுவயதிலேயே அவரின் நலன் கருதி அவருடைய அம்மா வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்க காலம் எப்படியும் ஒரு நாட்டின் இளவரசரை அதுவே தேர்ந்தெடுக்கும் என்பது போல லூசியஸ் தன் தாய் நாட்டுக்கு ஒரு கிளாடியேட்டர் திரும்பி வருகிறார். 

கிளாடியேட்டர் திரும்பி வரும் லூசியஸ் தன்னால் முடிந்த அளவு சிறப்பான நடிப்பை காட்டி இருக்கிறார் பார்க்க சிறு உருவமாக இருந்தாலும் களத்தில் எத்தனை பெரிய உருவங்களையும் சாய்ப்பது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எனினும் இவரிடம் மேக்சிமஸின் தோரணை இல்லாதது சற்று நெருடலாக உள்ளது மேலும் பென்சில் வாஷிங்டன் படத்தில் ஒரு கிளாடியேட்டர் தயார் செய்பவர் ஆக வந்து ஒட்டுமொத்த ரோம் நகரத்தையும் அவர் கைப்பற்ற போடும் சகுனி ஆட்டம் இந்த படத்தில் திறம்பட வேலை செய்துள்ளது. 

எனவே கிளாடியேட்டர் முதல் பாகம் போல் விறுவிறுப்பாக சென்றாலும் அதிலிருந்து ஓர் அழுத்தம் காட்சிகளில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

மேலும் அந்தக் காலத்து ராஜாக்கள் என்றால் கம்பீரமாக இருப்பார்கள் என்று நினைக்கும் போது இரண்டு சிறுவர்களை அரசராக அடையாளம் காட்டி செய்யும் கூத்துக்கள் கிறுக்குத்தனமாக உள்ளது. அதிலும் குரங்கை எல்லாம் மந்திரி பதவியில் உட்கார வைக்கும் காட்சி டூ மச். 

படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும் தத்துரூபமாக உள்ளதோடு ரத்த தெறிக்க தெறிக்க பல சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பான முறையில் ஒளிப்பதிவு செய்து இருப்பதோடு இசையும் பக்கபலமாக படத்திற்கு உள்ளது என்று சொல்லலாம்.

Summary in English: Gladiator 2 has finally hit the screens, and let me tell you, it’s a wild ride! Picking up years after the original film, it dives back into the epic world of ancient Rome with all its drama and grit. The cinematography is absolutely stunning; you can almost feel the dust of the Colosseum on your skin.

Check Also

அடி போடு தூள்..Mona 2 திரை விமர்சனம்..

So, let’s dive into the much-anticipated "Moana 2"! If you loved the first movie, you're in for a treat. The sequel picks up where we left off with our favorite wayfinder.