Thursday , 23 January 2025
champions-trophy

பிசிசிஐ போட்ட போடு வாலை சுருட்டியை பாகிஸ்தான்.. அப்படி என்னதான் சொன்னாங்க..

2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபிக் கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடத்த முடிவு செய்ததை அடுத்து பிசிசிஐ கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கைவிடப்பட்டது குறித்த தகவல்கள். 

கிரிக்கெட் என்றாலே உலக அளவில் ஒரு மிகப்பெரிய கிரேஸ் உள்ளது என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும் இன்றைய இளைஞர்களை கட்டிப்போட்டிருக்கும் விளையாட்டில் ஒன்றாக இந்த கிரிக்கெட் உள்ளது. 

அதிலும் இந்தியா பாகிஸ்தானோடு விளையாடும் விளையாட்டு இளசுகளின் மத்தியில் ஆரவாரத்தோடு பார்க்கப்படுகின்ற ஒரு விளையாட்டாக இன்று வரை விளங்குகிறது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபிக் கிரிக்கெட் தொடரில் பல அணிகள் பங்கேற்க உள்ள சூழ்நிலையில் இந்த போட்டியானது பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. 

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்க உள்ள இந்த தொடரானது பாகிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

champions-trophy

இதைக் குறிப்பாக இந்த தொடருக்கான போட்டிகள் கராச்சிலாகூர் ராவல் பிண்டி போன்ற மூன்று நகரங்களை தாண்டி ஹன்சா, முஸாஃபராபாத், ஸ்கார்டு முர்ரீ ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. 

இதில் ஸ்கார்டு  மற்றும் முஸாஃபராபாத் ஆகிய இந்த இரண்டு நகரங்களும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்ததால் இதை எதிர்த்து பிசிசிஐ செயலர் ஜெயிஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பேசினார். 

இதை அடுத்து உடனடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தானின் கிரிக்கெட் அமைப்பிடம் அந்த இடத்தை கைவிடுமாறு அதிரடியாக கூறியது. 

எனவே இந்த சாம்பியன் ஸ்ட்ரோபி தொடரானது கராச்சி, லாகூர் மற்றும் ராவல் பிந்தி ஆகிய மூன்று நகரங்களில் மட்டும் நடக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு தற்போது அறிவித்துள்ளது. 

champions-trophy

இந்நிலையில் இந்த தொடர் போட்டிகளில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தான் வர முடியாது என பி சி சி ஐ ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அத்தோடு இந்திய அரசு அனுமதி வழங்காததால் இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் அனுப்ப முடியாது என்ற முடிவை பிசிசிஐ அறிவித்திருந்ததோடு இந்தியா ஆடும் போட்டிகளை வெளிநாட்டில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதையும் கூறியிருந்தார்கள். 

இதற்கிடையே ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்த போட்டியை நடத்த கனவு கண்ட பாகிஸ்தானின் வால் ஓட்ட வெட்டப்பட்டுள்ளது என்று 

ரசிகர்கள் பலரும் அவர்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள். 

Summary in English: In a surprising turn of events, the Pakistan Cricket Board (PCB) has decided to drop the idea of a trophy tour for the Champions Trophy 2025. This came after some pushback from the Board of Control for Cricket in India (BCCI), which raised concerns about logistics and security.

Check Also

இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா தொடக்கம் சரியாக இல்லை.. ரோஹித் சர்மா பேட்டி!!

In the recent showdown between India and Australia, it was clear that the Indian team faced some tough challenges right from the start.