சன் டிவியில் பிரபலமான தொடராக திகழும் சுந்தரி சீரியலின் கல்யாண காட்சிகள் வெளிவந்து சீரியலில் முடிவா இது என்று கேட்க வைத்திருப்பதற்கான தகவல்கள்.
சின்னத்திரையில் சக்கை போடு போடும் சீரியல்களில் ஒன்றாகவும் டிஆர்பி ரேட்டை எப்போதும் தக்க வைத்து வரும் சீரியல் தான் சுந்தரி.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி என்ற சீரியலை காண்பதற்காக இல்லத்தரசிகள் வெகு ஆவலோடு காத்திருப்பதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய சீரியலாக இந்த சீரியல் உள்ளது.
கல்யாண சீன்னோட சன் டிவி சுந்தரி சீரியல் END..
டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருந்து வந்த சுந்தரி சீரியல் கடந்த பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இரண்டு சீசங்களாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இரண்டு சீசன் களையும் சேர்த்து இந்த தொடரானது 1120 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகி உள்ளதை அடுத்து இளைஞர்களும் பெருவாரியாக இந்த சீரியலை பார்த்து வருகிறார்கள்.
மேலும் புதிய புதிய சீரியல்கள் சன் டிவியில் அறிமுகமானதை அடுத்து விரைவில் என்ற சீரியல் முடிவுக்கு வரப்போவதாக இணையம் முழுவதும் தகவல்கள் பரவிய போதும் என்றும் முற்றுப்பெறாமல் இருந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இதை அடுத்து சுந்தரி சீரியல் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளிவந்து ரசிகர்களை கவலையில் தள்ளியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
இதற்குக் காரணம் டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாவது இடம் வரை தக்க வைத்து வந்த இந்த சீரியலானது தற்போது முடிவை எட்டிவிட்டது என்பது தெரியவந்துள்ளது.
இதற்குக் காரணம் சுந்தரி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்தப் படப்பிடிப்பில் சுந்தரியின் திருமணத்துடன் தொடரை முடித்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
வெளிவந்த கடைசி நாள் ஷூட்டிங் போட்டோஸ்..
அதற்கு சாட்சியாக கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையம் முழுவதும் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு மட்டுமல்லாமல் சற்று கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த தொடரோடு ஒன்றிப் போயிருந்த அனைவரும் சீரியல் முடிவை கஷ்டத்தோடு தான் ஏற்றுக்கொள்ள இருப்பார்கள் என்று சொல்லலாம்.
இதை அடுத்து தற்போது வெளிவந்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ந்து போய் இருக்கும் அந்த ரசிகர்கள் இந்த தொடரில் இன்னும் நீட்டித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.
Summary in English: The buzz around the “Sun TV Sundari” serial has been off the charts lately, especially with the news that the climax shooting is officially over! Fans have been on the edge of their seats, eagerly anticipating how this gripping storyline will wrap up. The cast and crew have put in so much hard work to bring this drama to life, and it’s exciting to see it all come together.