குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசனை சாய்த்த youtuber பற்றிய சில விஷயங்கள்.
உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற மைக் டைசனை youtubeபராக இருந்து பின்நாளில் குத்துச்சண்டை வீரராக மாறிய ஜெயக்பால் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸ்டாஸில் ஏடி அண்ட் டி மைதானத்தில் நடைபெற்ற இந்த குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசனை அவர் வீழ்த்தியது பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆட்டத்தைக் காண சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரிலும் லட்சக்கணக்கானோர் நெட் பிளக்ஸ் மூலம் இணையத்திலும் கண்டு போட்டியை மகிழ்ச்சியோடு பார்த்தார்கள்.
தற்போது 58 வயதை எட்டி விட்ட மைக் டைசன் இரண்டு முறை ஹெவி வெயிட் குத்துச்சண்டையில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
இவர் 19 வருடங்களாகவே குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்காமல் இருந்ததை அடுத்து அவரை எதிர்த்து களம் கண்ட 27 வயதான ஜேக் பால் குத்துச்சண்டை களத்திற்கு புதியவர் என்று கூட சொல்லலாம்.
இவரை மைக் டைசனோடு ஒப்பிடும்போது மிகவும் இளமையாகவும் நல்ல உடல் தகுதியோடும் இருக்கிறார். இந்தப் போட்டியானது 2 நிமிட சுற்றுக்களை கொண்ட எட்டு சுற்று போட்டிகளாக நடைபெற்றது.
அத்தனை சுற்றுக்களிலுமே மைக் டைசனை அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இளம் முன்னாள் youtuber போட்டியால கட்டுக்குள் வைத்திருந்தார் தன்னுடைய தாக்குதல்களில் துல்லியமான தாக்குதல்களை செய்து மைக் டைசனை வீழ்த்தினார்.
அத்தோடு இந்த போட்டியை பொறுத்தவரை மைக் டைசன் சற்று மெல்லமாகவும் மந்தமாகவும் செயல்பட்டார் என்று சொன்னால் மிகையாகாது. நீண்ட நாளுக்குப் பிறகு களம் இறங்கிய டைசனுக்கு மிகப்பெரிய பிரமாண்ட வரவேற்புகள் கிடைத்தது.
ஆனால் டைசன் வெற்றி பெறாததை அடுத்து அங்கு பெரும் சண்டையும் கூச்சலும் எழுந்தது போட்டியின் நடுவர்கள் என்பதற்கு 89-72,79-73,79-73 என்று புள்ளிகளை அறிவிப்பதற்கு முன்பே சில ரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறினார்கள்.
இந்தப் போட்டியில் ஜேக்பால் சுமார் 78 குத்துக்களை பதிவு செய்த நிலையில் டைசன் 18 குத்துகள் மட்டுமே செய்திருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஜெயக்பால் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு ஆன்லைனில் காமெடி வீடியோக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
MIKE TYSON HITS JAKE PAUL AT THE WEIGH IN #PaulTyson
—
LIVE ON NETFLIX
FRIDAY, NOVEMBER 15
8 PM ET | 5 PM PT pic.twitter.com/kFU40jVvk0— Netflix (@netflix) November 15, 2024
Summary in English: Mike Tyson slapping Jake Paul has taken social media by storm, and honestly, it’s hard to look away! The showdown went down during the weigh-in on Friday, and things got a little wild when Tyson gave the YouTuber-turned-boxer a solid smack right on the cheek. I mean, who knew a weigh-in could turn into such a dramatic scene?