தென்னிந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும். நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து. நானும் ரவுடிதான் என்ற படத்தில் பணியாற்றிய போது காதல் ஏற்பட்டு கடைசியில் திருமணத்தில் முடிந்தது.
இந்த திரைப்படமானது நயன் மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு திரைப்படமாக விளங்குவதால் தங்களுடைய திருமண வீடியோவில் அந்த படம் சார்ந்த காட்சிகள் பாடல்கள் இடம் பெறுவதை தவிர்க்க முடியாத சூழல் இருந்தது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா நேற்று ஒரு மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு அதில் தன்னுடைய திருமண வீடியோவில் இணைப்பதற்காக நானும் ரவுடி தான் படத்தின் சில காட்சிகளையும் இசையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டு படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் இடம் அனுமதி கேட்டு இரண்டு ஆண்டுகளாக அனுமதி கிடைக்காதது குறித்து சொல்லியிருந்தார்.
இந்த அறிக்கையில் நடிகர் தனுஷின் பெயரை எந்த அளவு டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு டேமேஜ் செய்து தான் அறிக்கை வெளி வந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
இதை அடுத்து இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு பலமுறை யோசித்துப் பார்த்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.
ஏனெனில் ஒரு நடிகர் தன்னுடைய பணத்தைப் போட்டு எடுத்த ஒரு படைப்புக்கு உரிமை கூறுவதில் எந்த தவறும் கிடையாது. அதை தங்களுடைய திருமண வீடியோவில் வைத்து கோடிக்கணக்கில் படம் பார்க்க துடிக்கும் நயன்தாரா தனுஷின் கேள்வி கேட்க எந்த தகுதியும் கிடையாது.
இன்னும் சொல்லப்போனால் நடிகை நயனுக்கும் தனுஷுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தன்னுடைய ரசிகர்கள் திருமண வீடியோவை பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படி தன்னுடைய ரசிகர்கள் பற்றி திடீரென நீலிக்கண்ணீர் வடிக்கும் நடிகை நயன்தாரா திருமண வீடியோவை ஏன் யூடியூபில் வெளியிடவில்லை திருமணத்தன்று பத்திரிக்கையாளர்களை கூட அனுமதிக்கவில்லை.
அது மட்டுமல்லாமல் தனுஷின் நடவடிக்கைகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக பேசாமல் தனிமனித தாக்குதலில் இறங்கி இருக்கிறார். நயன் தன்னுடைய படங்களின் பிரமோசனுக்கு வராத நடிகை தயாரிப்பாளர்கள் எவ்வளவு கெஞ்சி கேட்டும் தன்னுடைய படங்களில் பிரமோசனுக்கு செல்ல மாட்டார்.
இவருக்கு தன்னுடைய திருமண வீடியோவால் பல கோடி நஷ்டமாகிறது என்பதால் தனிமனித தாக்குதல் நடக்கும் அளவுக்கு நரித்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்ன பல்வேறு கண்டன குரல்கள் தற்போது எழுந்து வருகிறது.
Summary in English : Recently, fans have been buzzing with questions about actress Nayanthara and her marriage video. It’s like everyone suddenly turned into a detective, analyzing every frame and detail! Some folks are accusing her of trying to cash in on the big day, which honestly seems a bit unfair if you ask me. I mean, can’t we just let people celebrate their love without all the scrutiny?