Thursday , 23 January 2025
tour

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க நோ நுழைவு கட்டணம்.. குஷியான சுற்றுலா பயணிகள்!!

சென்னையில் இருக்கும் மாமல்லபுரத்தில் புராதான சின்னங்களை இனி இலவசமாக பார்க்கலாம் என்று வந்திருக்கும் தகவலோடு நவம்பர் 19 முதல் 25 வரை பாரம்பரிய வாரமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பல்லவ மன்னர்களின் கட்டிட திறனை எடுத்துக்காட்டக் கூடிய வகையில் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கக் கூடிய குகை சிற்பங்கள், மலையில் உருவாக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் அவர்களது கலை திறனை வெளியுலகிற்கு பறைசாற்றக்கூடிய வகையில் உள்ளது.

ratham

அந்த வகையில் சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மாமல்லபுரத்தில் 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பக்கலை வல்லுனர்களால் வடிக்கப்பட்ட பல்வேறு சிற்பங்கள் கடற்கரையில் உள்ளது. 

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க நோ நுழைவு கட்டணம்..

இதில் தங்களது கைவண்ணத்தை மிகவும் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருக்கக்கூடிய ஐந்து ரதம், அர்ஜுனன் தவசு, கிருஷ்ண மண்டபம், வெண்ணை உருண்டை பாறை என பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளது. 

இந்த அழகிய சிற்பங்களை காண்பதற்காக உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் தினம், தினம் மாமல்லபுரத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். 

pm

அந்த வகையில் தாஜ்மஹாலை பார்த்த சுற்றுலா பயணிகளை விட மாமல்லபுரத்தில் இருக்கும் புராதான சின்னங்களை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

மேலும் சீன அதிபரும்  இந்திய பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள் அத்தோடு உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் இந்த புராதான சின்னங்களை காண்பதற்கு இனி கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

குஷியான சுற்றுலா பயணிகள்..

அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் பாரம்பரிய வாரமாக நவம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ள நிலையில் இங்கு இருக்கும் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை கண்டு ரசிக்க அனைவரும் இலவசமாகவே சென்று பார்க்கலாம். 

tour

இந்த மாமல்லபுரமானது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. இதுவரை ரூபாய் 40 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில் இனி இந்த பகுதிகளை நீங்கள் இலவசமாக பார்க்க முடியும். 

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சுற்றுலா பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியில் இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து வருகிறார்கள். 

Summary in English: If you’re looking for a unique getaway without breaking the bank, Mamallapuram is the place to be! Nestled along the stunning coast of Tamil Nadu, this ancient town is famous for its incredible rock-cut temples and sculptures, many of which date back to the 8th century. The best part? You can explore these historical gems without paying an entrance fee!

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.