Wednesday , 22 January 2025

IND vs AUS முதல் டெஸ்டில் களம் இறங்கும் கம்பீரின் செல்லப்பிள்ளை ஹர்ஷித் ராணா..

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபிக் தொடரில் இந்திய அணியில் கம்பீரின் செல்லப் பிள்ளையாய் திகழும் ஹர்ஷித் ராணா களம் இறக்கப்படுவது உறுதியாக உள்ளது. 

இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளராக திகழும் கௌதம் கம்பீர் தனது செல்ல பிள்ளை ஹர்ஷித் ராணாவிற்கு ஆஸ்திரேலியா தொடரில் விளையாட வாய்ப்பினை அளிக்க உள்ளாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது‌

இன்னலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளதை அடுத்து இந்த போட்டியில் ஹர்ஷித் ராணா இந்திய அணியின் பிரேயிங் லெவனின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இடம்பெறிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 

border gavaskar trophy

இவரை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக உள்ளூர் அளவில் ஒரு நாள் போட்டிகள் டெஸ்ட் போட்டிகள் டி20 போட்டிகள் இடம் மொத்தம் 50 போட்டிகளில் கூட ஆட முடியாத இவரை எப்படி களம் இறக்க இருக்கிறார்கள் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது. 

இதற்கு காரணம் அதிக அளவு அனுபவம் இல்லாத இவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட வாய்ப்பு கொடுத்திருப்பது பலர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான உத்தேச அணியில் இவரை தேர்வு செய்த போது இந்த கேள்விகள் இருந்தது எனினும் பிளேயிங் லெவனிலும் ஆட வைப்பது அதிர்ச்சியை தந்துள்ளது. 

border gavaskar trophy

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹர்ஷித்ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக சிறப்பாக விளையாடியிருந்தார். இந்த அணி கோப்பையை வெல்வதில் இவரின் முக்கிய பங்கு இருந்தது.

அந்த சமயத்தில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அப்போதே ஹர்ஷித் மீது கம்பீருக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டது அதனால் தான் குறுகிய காலத்தில் ஹர்ஷித் ராணா இந்திய டெஸ்ட் அணிகள் இடம் பிடித்திருக்கிறார்.

ஹர்ஷித் ராணா இதுவரை 10 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் 469 ரன்கள் குவித்தவர் இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடங்கும்.

border gavaskar trophy

எனவேதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாட்டனிடம் ஓரளவுக்கு கை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் தான் இவரை தேர்வு செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள் மேலும் இந்தியா ஏ அணியுடன் இந்தியா அணி ஆடிய பயிற்சி போட்டியில் ஹர்ஷித்ராணா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அதிக பவுன்ஸ் பந்துகளை வீசியதாக கூறப்படுகிறது. 

எனவே தான் அவருக்கு பிளேயிங் லெவலில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக டிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

Summary in English: Get ready, cricket fans! The buzz is all about Harshit Rana making his debut in the first Test against Australia. This young talent has been turning heads with his impressive performances in domestic cricket, and now he’s got the chance to shine on an international stage.

Check Also

இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா தொடக்கம் சரியாக இல்லை.. ரோஹித் சர்மா பேட்டி!!

In the recent showdown between India and Australia, it was clear that the Indian team faced some tough challenges right from the start.