Thursday , 23 January 2025

எவ்வளவு உயரப் பறந்தாலும் பிட்காயின் மதிப்பு கடைசியில் ஜீரோ.. அதிர்ச்சி தந்த ஆன ஸ்ரீநிவாஸ்..

பிட்காயினின் மதிப்பு தற்போது உச்சத்தை தொட்டுவரக்கூடிய சமயத்தில் பொருளாதார வல்லுனரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் பிட்காயின் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றது முதலில் பிட்காயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு ஒரு பிட்காயின் விலை சுமார் 60 லட்சமாக இருந்த நிலையில் தற்போது அது 82 லட்சமாக உயர்ந்துள்ளது. 

இதனை அடுத்து வரும் காலங்களில் இந்த மதிப்பு இன்னும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து இருப்பதோடு முதலீடுகளை செய்து வருகிறார்கள். 

எவ்வளவு உயரப் பறந்தாலும் பிட்காயின் மதிப்பு கடைசியில் ஜீரோ..

ஆனால் மிகப் பிரபலமான பொருளாதார வல்லுனரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் பிட்காயினில் உள்ள சிக்கல்களை சூப்பராக எடுத்து சொல்கிறார். அதில் பிட்காயினுக்கு சுத்தமாக மதிப்பில்லை. அது ஒரு மதிப்பெற்ற ஒன்று என்று சொல்லி இருக்கிறார். 

ட்ரம்ப் ஏதோ செய்து விடுவார் என்ற நம்பிக்கையில் பிட்காயினின் மதிப்பு ஏறி உள்ளது. என்னிடம் ஏலன் மாஸ்க் கூட டோஸ்காயினை வைத்து ஏதோ செய்து கொண்டிருக்கிறார். எங்கு போனாலும் பிட்காயின் மதிப்பு கடைசியில் ஜீரோ தான். 

இந்த கேம் குறைந்தது பத்து ஆண்டுகள் தான். கிரிப்டோ கரன்சிக்கு தான் உண்மையான மதிப்பு உள்ளது. அதன் பக்கம் தான் நாம் நகர வேண்டும் டாலர் மதிப்பு ஒரு பக்கம் போக இதற்கான உதாரணத்தை பாருங்கள். 

டாலர் மதிப்பு உயரும்போது தங்கம் விலை குறைகிறது crypto ஒரு பக்காவான கரன்சி என்றால் டாலர் மதிப்பு ஏறும் போது கிரிப்டோ மதிப்பு குறைய வேண்டும் டாலர் மற்றும் கிரிப்டோ இரண்டும் ஒரு சேர ஏறுகிறது என்றால் அதில் பிரச்சனை என்று தான் அர்த்தம். 

அதிர்ச்சி தந்த ஆன ஸ்ரீநிவாஸ்..

தங்கம் கூட அது போல தான் நடந்தது. தங்கம் விலை சரியும் போது ரஷ்யா சீனா துருக்கி ஆகிய நாடுகள் வாங்கியது. அப்போது தங்கம் டாலர் என இரண்டும் ஏறியது இந்தியா கூட வாங்கி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். 

இது போன்ற அரிய சந்தர்ப்பங்களில் டாலர் மதிப்பு ஏறினால் தங்கம் விலை குறையும்‌. ஒருவேளை டாலர் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும். ஆனால் பிட்காயினால் இந்த இரண்டும் அதிகரிப்பதால் அதற்கு மாற்று எது என்று சொல்ல முடியாது என்று சொல்லி இருக்கிறார். 

Summary in English: Anand Srinivasan recently stirred up quite a conversation in the crypto community with his bold take on Bitcoin. While he acknowledges that Bitcoin might see some short-term gains, he’s not holding back when it comes to its long-term prospects. According to him, despite any potential spikes in value, Bitcoin’s final worth could end up being pretty much zero.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.