ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்ட மசோதாவானது தீவிரமாக நடைமுறைப்படுத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்வம் காட்டி வருகிறது இந்நிலையில் மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சொல் ஏன் இடம் பிடித்து உள்ளது என்பதை சற்று யோசியுங்கள்.
இந்திய தேர்தல் வரலாற்று சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை குறித்து புரிதல்கள் இருந்தால் மட்டும் தான் இது பற்றி நீங்கள் விளக்கமாக தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
இதனை எப்படியும் நிறைவேற்றுவோம் என பாஜக அணியும் இல்லை நிறைவேற்ற விடவே மாட்டோம் என்று இந்திய கூட்டணி கட்சிகள் அனைத்தும் முடிவெடுத்து களத்தில் உள்ளது.
இதில் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது என்ன அது கடந்து வந்த பாதை என்ன எதிர்காலத்தில் என்னென்ன சவால்களை சந்திக்க இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது குறித்து விரிவான அலசலை செய்யலாம்.
இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதலாவது பொது தேர்தல் அதாவது லோக்சபா தேர்தல் அன்றைய மாகாணங்களுக்கு இடையே ஆன தேர்வுகள் ஒரே நேரத்தில் தான் நடைபெற்றது.
அதுவும் குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையானது 1951 52 1957 1962 1967 என முதல் நான்கு லோக்சபா தேர்தல்களில் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் 1967 க்கு பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் வலிமை இல்லாத ஒன்று என்று ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் 1967-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடைபெற்றது அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று அண்ணா முதல்வரானார். அண்ணாவின் மறைவை அடுத்து கலைஞர் கருணாநிதி முதல்வராக பதவியேற்றார்.
மேலும் 1971 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்த போது தமிழ்நாட்டுக்குரிய சட்டசபை தேர்தலோடு இணைந்து அந்த தேர்தலும் நடத்தப்பட்டது. இதை அடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை அளவில் இல்லாமல் போனது.
எனினும் 1971 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல் இணைந்து நடத்தப்பட்டது இதைத் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையமானது தனது ஆண்டு அறிக்கையில் நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுடன் மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.
அதுபோலவே 1999 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுகளில் சட்ட ஆணையமும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்வதை அடுத்து நாடாளுமன்ற குழுவின் 79 ஆவது அறிக்கை ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த பரிந்துரை செய்தது.
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது முதலே ஒரே நாடு ஒரே தேர்தல் பேசும் பொருளாக இருந்து வருவதோடு அதை நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவித்தது.
இதற்கு முன்னால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இதுகுறித்து ஆய்வதற்காக உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்த குழுவானது அரசியல் கட்சிகள் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரோடு இது குறித்து ஆலோசனை நடத்தியது.
பின்னர் இது குறித்த பரிசீலனையை மத்திய அரசிடம் வழங்கியதை அடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தலாம் முதல் கட்டமாக லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்.
தேர்தல் நடந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்திவிட வேண்டும் மேலும் அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் உருவாக்கப்பட வேண்டும் அத்தோடு நாடு முழுவதும் விரிவான விவாதங்களுக்கு வழிவகை செய்ய குழு ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற பரிந்துரைகள் தரப்பட்டது.
இதனை கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி தலைமை தரும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது அதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது என்பது தற்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
Summary in English: The idea of “One Nation, One Election” has been buzzing around in Indian political circles for quite some time now. But it’s not a new concept; it actually has a historical journey that dates back to 1951! Let’s take a fun stroll down memory lane and check out the timeline leading up to 2024.