த லயன் கிங் படத்தின் அடுத்த பகுதியான முஃபாஸா த லயன் கிங் என்ற பெயரில் வெளிவரு இருக்கும் திரைப்படமானது 20-ஆம் தேதி அதாவது வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது அது குறித்து விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
முஃபாஸா த லயன் கிங் என்ற திரைப்படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக தயாராக உள்ளது இதற்கான அனைத்து பணிகளும் தற்போது முடிந்து விட்டது.
தொடர்ந்து படத்தின் தமிழ் டப்பிங் பணி நிறைவு பெற்ற போது எடுத்த வீடியோக்களை டிஸ்னி நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்து உள்ளது.
இந்த படத்தை பொறுத்தவரை முஃபாஸா என்ற கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தாலும் இந்த கதாபாத்திரம் படத்தில் வரக்கூடிய நேரம் குறைவு தான் படத்தின் முதல் பாகத்தில் சிம்பா கதாபாத்திரத்தின் வளர்ச்சி அது எப்படி காட்டை மீண்டும் அடைகிறது என்பது குறித்து தான் சொல்லப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் பகுதி வெளிவந்த போது உலகம் முழுவதும் பலத்த ஆதரவு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தின் வசூல் டிஸ்னி எதிர்பார்த்ததை விட அதிக அளவு இருந்ததாக சொல்லலாம்.
மேலும் படத்தை ஓ டி டி களத்தில் பல மில்லியன் நிமிடங்கள் பார்த்திருப்பதால் இதன் இரண்டாவது பாகத்தை உருவாக்க முடிவு செய்து இதன் இரண்டாவது பாகம் தற்போது வெளிவந்துள்ளது. இதில் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு தமிழில் முதல் பகுதியில் அரவிந்தசாமி அட்டகாசமாக குரல் கொடுத்திருக்கிறார்.
முஃபாஸா என்ற முக்கிய கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸ் குரல் கொடுக்க படத்தில் வரும் டாக்கா கதாபாத்திரத்திற்கு அசோக் செல்வன் குரல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 20ஆம் தேதி வெளிவர உள்ள முஃபாஸா த லயன் கிங் இந்தப் படத்திற்கு ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி குரல் கொடுத்து உள்ளார்கள்.
இவர்கள் பும்பா மற்றும் டிமோனா கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருப்பதாக விஷயங்கள் வெளிவந்துள்ளது. கிரேஸ் கதாபாத்திரத்திற்கு நாசரும் ரஃபிக்கி கதாபாத்திரத்துக்கு விடிவி கணேசும் குரல் கொடுத்து இருக்கிறார்கள்.
அடுத்து படத்தின் டப்பிங் சமயத்தில் எடுத்த வீடியோவை பட குழு வெளியிட்டு இருப்பது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றுள்ளது.
மேலும் டப்பிங் கொடுக்கும்போது ரசிகர்களின் முபா பாவனையை பார்த்து ரசிகர்கள் குஷி ஆகி இருப்பதோடு அவர்கள் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.
Summary in English: Disney India has just dropped the Tamil dubbing video of “Mufasa: The Lion King,” and it’s already making waves online! Fans are buzzing with excitement as they get to experience the iconic story of Mufasa in their native language. The vibrant voice acting and stunning visuals really bring this beloved character to life, making it a must-watch for both old fans and newcomers alike.