2024 ஆம் ஆண்டு அண்டர் 19 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா அண்டர் 19 மகளிர் அணி மரண அடி கொடுத்து வங்கதேசத்தை 76 ரன்னுக்குள் சுருட்டி வென்றது அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
மலேசியாவில் இருக்கும் கோலாலம்பூரில் அண்டர் 19 மகளிர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றது இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் முன்னேறி இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
அந்த வகையில் நீக்கி பிரசாத் தலைமையில் களம் இறங்கிய இந்திய மகளிரணி இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. இதில் மிக்கி பிரசாத் தலைமையில் இந்திய அணி களம் இறங்கியது.
ஆட்டம் படு ஜோராக நடைபெற்ற வேலையில் இந்திய அணி ஒரு பக்கம் வெக்கெட்டுகளை இழந்து இருந்த நிலையில் கொங்காடி திரிஷா அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து ஆடியது.
இதனை அடுத்து களம் இறங்கிய வங்கதேச அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 76 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியின் சார்பில் கொங்காடி திரிஷா 47 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார் அவரே இந்த போட்டியின் சிறந்த வீராங்கனைக்கான விருதனையும் வென்றார். இந்த போட்டியின் போது இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்ததால் தான் இந்த போட்டியில் இந்தியாவிற்கு வெற்றி கிடைத்தது.
இதில் ஆயுசி சுக்கிலா 3 விக்கெட்டையும் வருணிகா ஸ்ரீ ஜோடியா 2 விக்கெட்டையும் சோனம் யாதவ் 2 விக்கெட்டுகளையும் விஜே ஜோஷிதா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இந்நிலையில் பேட்டிங்கில் 52 ரன்கள் சேர்த்த கொங்காடி திரிஷா பந்து வீச்சிடும் சிறப்பாக செயல்பட்டு மூன்று ஓவர்கள் பந்து வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
Summary in English: In an exciting showdown, India clinched the Under-19 Women’s Asia Cup title by beating Bangladesh by 41 runs! The atmosphere was electric as fans cheered on their teams, but it was India that came out on top in this nail-biting final.