தமிழக அரசு ஒவ்வொரு பொங்கல் பரிசை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கி வருகிறது அந்த வகையில் 2025 பொங்கல் பரிசினை மூன்று தொகுப்பாக பிரித்து வழங்க ஆலோசனையில் இறங்கி உள்ளது அது குறித்து இந்த பதிவில் படிக்கலாம்.
தமிழக அரசு நிதி பற்றாக்குறையை சமாளிக்க கூடிய வகையில் 2025 ஆம் ஆண்டு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பை மூன்றாக பிரித்து வழங்கலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது.
தமிழக அரசை பொருத்தவரை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.
இப்படி ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதை அடுத்து 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இதன்மூலம் பலன் அடைந்து வருகிறார்கள் இதற்காக அரசு 20500 கோடி செலவு செய்கிறது.
இந்த பொங்கல் தொகுப்பானது அனைத்து மத மக்களுக்கும் தமிழர் பண்டிகையான பொங்கலை கொண்டாட கூடிய வகையில் பரிசு தொகுப்பாக வழங்கப்படுகிறது அதே நேரத்தில் கிறிஸ்மஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கினார் அவருக்கு உதவியாக இருக்கும் என்ற கருத்து எழுந்தது.
எனவே பொங்கல் பரிசு தொகுப்பை மூன்றாகப் பிரித்து கிறிஸ்மஸ் ரம்ஜான் பண்டிகை காலங்களில் வழங்கலாமா என்ற யோசனையை அரசு எடுத்துள்ளதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது இது சம்பந்தமாக முதல் கட்ட ஆலோசனையை நிதி துறையில் நடத்தி வருகிறார்கள்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ஒரே நேரத்தில் நிதி ஒதுக்குவதால் அரசுக்கு நெருக்கடி ஏற்படுகிறது எனவே மூன்றாக பிரித்து நிதி ஒதுக்கீடு செய்தால் நெருக்கடியை ஓரளவு சமாளிக்க முடியும் மூன்று மதத்தினரையும் திருப்திப்படுத்த முடியும் என்ற என்ற எண்ணமும் உள்ளது.
இது சம்பந்தமான சாத்திய கூறுகள் குறித்து அரசு ஆய்வு செய்து அதற்கு ஏற்ப முடிவு எடுக்க உள்ளது அத்தோடு மத தலைவர்களின் கருத்துக்களை பெற்று அதன் அடிப்படையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள்.
இதனைத் தொடர்ந்து இது சம்பந்தப்பட்ட திட்ட அறிவிப்பை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்புள்ளது அதே நேரத்தில் வரும் 2025 ஆம் ஆண்டு வழக்கம் போல பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.
Summary in English: The government has come up with an interesting plan to help folks during these tough financial times—splitting the Pongal gift package into three parts! Instead of giving everything at once, they’re breaking it down into three separate distributions. This way, families can receive support more frequently throughout the season, which can really help ease some of that financial pressure.