வருகின்ற 2025 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு அரசு தரும் பொங்கல் பரிசுத்தொகையில் வெல்லம் சேர்க்கப்படுமா? என்பது குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்க இருக்கிறார்கள் இது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு என்று தமிழக அரசு தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் வழங்கி வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
தற்போது இந்த பொங்கல் பரிசு தொகையோடு வெல்லம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட உள்ளது. இதற்கு தமிழக அரசு பதில் மனு தரும் அல்லது இன்று இது தொடர்பான முக்கிய முடிவு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலர் சுவாமிமலை எஸ் விமலநாதன் சார்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட உள்ள நிலையில் சக்கரைக்கு பதிலாக வெள்ளம் தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொங்கலுக்கு பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வரும் வேலையை நேரடியாக வங்கியில் செலுத்த அனைத்து ரேஷன் அட்டைதார குடும்பத் தலைவர்களின் வங்கி கணக்கு தேவை.
அதுமட்டுமல்லாமல் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு பயன் இல்லாமல் போய்விடும். எனவே நேரடியாக வங்கியில் பணம் செலுத்தக்கூடிய ஆலோசனைகள் அது குறித்த நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமல்லாமல் சர்க்கரை அட்டைதாரர்கள் என எல்லோருக்கும் இந்த பரிசுத்தொகை கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் நிலையில் அதற்கு முன்பாக இது தொடர்பான அறிவிப்புகளை விரைவில் வெளியிடலாம்.
மேலும் இதற்காக 238.92 கோடி ரூபாய் செலவாக உள்ளது. ஒரு ரேஷன் கார்டு ஒன்றுக்கு ஒரு டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரம், தேதியை பார்த்து சென்று அந்தத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
இதில் சிலருக்கு மட்டும் மாதம் 2000 கிடைக்கும் மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக அதாவது மாதத்தின் தொடக்கத்திலேயே கொடுக்கலாம்.
எனவே பொங்கல் திருநாளை சிறப்பாக மக்கள் கொண்டாட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள்,வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை நியாய விலை கடைகளில் வழங்கப்படும் என அரசு சொல்லியுள்ளது.
இதில் வெல்லம் வழங்கும் போது அந்த வெல்லம் உருகி விடுவதால் தான் சர்க்கரையை கொடுத்ததாக பதில் அளித்து இருக்கக்கூடிய தமிழக அரசு இந்த வழக்கு காரணமாக இந்த முறை வெல்லம் வழங்குமா? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இதை எடுத்து இந்த பொங்கலுக்கான டோக்கன் அடுத்த வார இறுதியில் அதாவது 29ஆம் தேதியில் இருந்து வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
Summary in English: Pongal is just around the corner, and the Tamil Nadu government is cooking up something special for the festivities! This year, they might be adding a sweet touch to the celebrations by including “vellam” (jaggery) in the Pongal gift packs at ration shops. If you’re a resident of Tamil Nadu, you know that these gift packs are always a highlight during this festive season.