தென்றல் சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ருதி ராஜ் இவருக்கும் விஜய்க்கும் இடையே என்ன உறவு உள்ளது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகள் சில ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும் வந்த வேகத்திலேயே எங்கே சென்றார்கள் என்று தேடக்கூடிய அளவு நிலைமை மாறிவிடும்.
அது போல தான் சில முக்கியமான பெரிய நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகைகளின் நிலைமையும் இருக்கும் சில நாட்கள் கழித்து திடீர் என காணாமல் போய் அதன் பிறகு ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள்.
விஜய்க்கும் தென்றல் துளசிக்கும் இடையே உள்ள உறவு?
அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கும் இந்த நடிகை சில திரைப்படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர். இதனை அடுத்து தென்றல் என்ற சீரியலின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த நடிகை.
அந்த நடிகை நீங்கள் நினைப்பது போல ஸ்ருதிராஜ் தான். இவர் யார் இவருக்கும் தளபதி விஜய்க்கும் என்ன உறவு என்பது பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
நடிகை ஸ்ருதி ராஜ் 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தவர் தற்போது இவருக்கு 44 வயது ஆகிறது. இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் சென்னையிலேயே படித்து முடித்திருக்கிறார்.
15 வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்து பலர் மத்தியிலும் தனக்கு என்று ஓர் ரசிகர் படையை அமைத்துக் கொண்டார்.
இதை அடுத்து இந்த மலையாள படத்தில் நடிப்பை பார்த்து நடிகர் விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மாண்புமிகு மாணவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்தார்.
இந்தப் படத்தில் கல்லூரி மாணவியாக ஸ்ருதி ராஜ் நடித்திருந்தார். மேலும் இவர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் போது இவர் பள்ளியில் படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்த படத்தில் விஜயுடன் நடித்ததை அடுத்து நானும் ஒரு ஹீரோ தாண்டா? என சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விஜய்க்கு இந்த படம் நல்ல தொடக்கத்தை கொடுத்தது.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் விஜய் ஓட நடிக்கும் சமயத்தில் நடிகை ஸ்ருதி ராஜ் மற்றும் விஜய் அண்ணன் தங்கை போல் பழகி இருந்தார்கள். நடிகர் விஜய் ஸ்ருதியை தங்கச்சி என்று தான் அன்போடு அழைப்பாராம்.
என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..
அதுபோல ஸ்ருதியும் விதியை அண்ணா அண்ணா என்றுதான் பாசமாக அழைப்பாராம் ஒரு முறை நடிகர் விஜய் வீட்டுக்கு சென்று அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார் அப்போது அவர் எனக்கு தங்கச்சி இல்லாத குறையை நீ தீர்த்து வச்சிட்டோமா என்று கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்ட ஸ்ருதி ராஜம் எனக்கு அண்ணன் இல்லாத குறை இருந்தது இப்ப அந்த குறை தீர்ந்துவிட்டது என்று சொல்லி இருக்கிறார். அன்றிலிருந்து இன்றுவரை விஜய் தன்னுடைய சொந்த அண்ணனாக நினைத்துக் கொண்டு இருப்பதாக ஸ்ருதிஹாச் கூறியிருக்கிறார்.
மேலும் இந்த படம் முடிந்த பிறகு அடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் படிப்பை தொடர வேண்டும் என்பதால் சினிமா வாய்ப்புகளை தவற விட்டிருக்கிறார் ஸ்ருதி ராஜ்.
ஆனால் நடிகர் விஜய்யோ தொடர்ந்து நடித்து தற்போது ஒரு மாஸ் ஹீரோவாக மாறி இருக்கிறார் மேலும் அரசியலில் குதித்து தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து தற்போது அரசியலில் புகுந்து விட்டார்.
மாண்புமிகு மாணவன் படம் வெளியாகி ரொம்ப நாள் ஆகிவிட்டது தற்போது என்னை அவருக்கு ஞாபகம் இருக்கிறதா? என்று கூட தெரியவில்லை. ஆனால் தற்போது கூட அவரை எங்கேயாவது சந்தித்தால் ஒரு தங்கையாக கண்ணீர் விட்டு அழுது பழைய நினைவுகளை அவரிடம் பேச வேண்டும் என்று ஆசை உள்ளதாக ஸ்ருதி ராஜ் கூறியிருக்கிறார்.
தன்னுடைய பள்ளி கல்லூரி படிப்பை முடித்த பிறகு சுருதிராஜுக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது அதனை ஏற்று சில படங்களில் ஹீரோயினியாகவும் நடித்திருக்கிறார்.
எனினும் அந்தப் படங்கள் எதுவும் சுருதிராஜின் வளர்ச்சிக்கு கைகொடுக்காமல் போனதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த இவர் 2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தென்றல் சீரியலில் ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.
இந்த சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் ஒரு நடுத்தர வருடத்தை சேர்ந்த பெண்ணாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்ததோடு இவரது நடிப்பு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளானது.
இந்த சீரியலில் நடித்து முடித்துப் பிறகு அவருக்கு ஆபீஸ் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திய இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி என்ற சீரியலில் மகாலட்சுமி என்ற கேரக்டரில் தற்போது நடித்துவரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Summary in English: Actress Shruthiraj recently shared some heartwarming memories about her special bond with actor Vijay, and it’s truly a trip down memory lane! They worked together on the classic movie “Manbumigu Maanavan,” which hit theaters way back in 1996. Can you believe it’s been that long?