அண்மையில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக திகழும் விஜே மணிமேகலை தன்னிடம் இருக்கும் கெட்ட பழக்கவழக்கங்கள் குறித்து ஓப்பனாக பேசியிருக்கும் விஷயம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்து சென்ற 2024 ஆம் ஆண்டு விஜே மணிமேகலைக்கு எப்படி இருந்தது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் 2025 ஆம் ஆண்டு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விஜே மணிமேகலை பேசி இருக்கிறார்.
இப்படி அவர் சொன்ன விஷயத்தில் 2024 ஆம் ஆண்டு பல பாடங்களை கற்றுக் கொண்டதாக சொல்லி அவர் அதில் முக்கியமாக நாம் செய்யக்கூடிய வேலையை மட்டும் காதலிக்க வேண்டும் என்ற பீடிகையும் போட்டார்.
அந்த கெட்ட பழக்கத்திற்கு அடிமை ஆயிட்டேன்.. உடம்பு ஏறிடுச்சு..
அதுவும் நாம் வேலை செய்யும் அந்த கம்பெனியை காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே கம்பெனியை எப்போதும் காதலிக்காமல் செய்கின்ற வேலையை காதலிக்க வேண்டும் என்பதை 2024 ஆம் ஆண்டு தனக்கு கற்றுக் கொடுத்தது என்பதை விளக்கினார்.
மேலும் கடந்த ஆறு வருடங்களாக சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது அவருக்கு கனவாகவே இருந்ததை அடுத்து அதை நிறைவேற்ற உத்வேகம் அளித்தது இந்த 2024 என்பதால் மிகப்பெரிய சந்தோஷம் தனக்கு கிடைத்ததாக சொன்னார்.
அத்தோடு வழக்கமாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா போவோம். ஆனால் இந்த வருடம் எங்கேயும் செல்லவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 10294.00 ரூபாய்க்கு ஆன்லைனில் உணவினை ஆர்டர் செய்து சாப்பிட்டு இருப்பதாக பகிர்ந்தார்.
அதுமட்டுமல்லாமல் தனியாக வீட்டில் சமையல் செலவுக்கு பொருட்கள் வாங்கி இருப்பதாகவும் இதில் மாதத்திற்கு 10,000 என்றால் கூட வருடத்திற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சாப்பாட்டுக்கு மட்டும் செலவிடுகிறோம் என்று பட்டியல் போட்டார்.
மேலும் அதை சற்று குறைத்து உடல் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த முடிவு செய்து ஆகவும் எனவே 2025 நான் சமைக்க கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று சபதம் மேற்கொண்டு இருப்பதாக வி ஜெ மணிமேகலை சொல்லி இருக்கிறார்.
அத்தோடு இவர் செல்போனுக்கு அடிமையாகி விட்டதாகவும் அதில் இருந்து விடுதலை பெற முயற்சி செய்வதாகவும் கடந்த 29ஆம் தேதி மட்டும் 2 மணியிலிருந்து 21/4 மணி நேரம் செல்போனில் பயன்படுத்துகிறேன் என்றால் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் வீணாகிறது.
வெட்கமில்லாமல் சொன்ன விஜே மணிமேகலை..
எனவே இந்த 2025 ஆம் ஆண்டு முதல் இதை அளவாக பயன்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தை எடுத்து இருப்பதாக சொல்லி அவர் தன்னுடைய கணவர் உடம்பு அதிகமாகிவிட்டதாகவும் ஜிம்முக்கு சென்று உடம்பை குறைக்க முயற்சி செய்து வருவதாகவும் சொல்லி இருக்கிறார்.
அத்தோடு குறைந்தபட்சம் காலை 6:00 மணியில் இருந்து ஏழு மணிக்குள் தூங்கி எழுந்து விட வேண்டும் என்ற இலக்கை கொண்டிருப்பதாகவும் இது நடக்குமா? நடக்காதா? என்பதை டிசம்பர் 2025 டிசம்பரில் போட போகும் புதிய வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து விஜே மணிமேகலை பகிர்ந்திருக்கும் இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் லைக் குவித்து கமெண்ட்டுகளில் நெகட்டிவான விமர்சனங்களை தந்து வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.
Summary in English: In 2025, VJ Manimegalai decided it was time for a change. She took a good look at her life and realized that her mobile phone was becoming more of a distraction than a tool. Like many of us, she found herself scrolling endlessly through social media, missing out on the little joys happening right in front of her. So, she made the bold decision to kick some of those bad habits to the curb!