Wednesday , 22 January 2025

இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவன் மீது வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு!!

இந்து பெண்களுக்கு எதிராக பேசியதாக அவதூறு வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட் இன்று ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது அது குறித்து பார்க்கலாம். 

2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கார் கூட்டமைப்பு சார்பில் நடந்த காணொளி கருத்தரங்கத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து பேசப்பட்ட அவற்றை மேற்கோள் காட்டி பேசினார். 

இதனை அடுத்து இவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டதோடு பாஜக, இந்து அமைப்புகள் கண்டனம் செய்தது. 

மேலும் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. சர்வதேச கருத்தரங்கில் தேசிய விசிக தலைவர் திருமாவளவன் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக சொல்லப்பட்டது. 

மேலும் மக்களின் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட திருமாவளவனுக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த வேதா என்பவர் சென்னை  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மனுஸ்ருதி புத்தகத்தில் இருந்ததை தான் பேசியதாகவும் அந்த புத்தகத்தில் பெண்கள் எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து பேசினேன் ஒழிய எந்த உள்நோக்கத்தோடும் தான் எதுவும் பேசவில்லை என்று ஐகோர்ட்டில் விளக்கம் தந்தார். 

இதைத்தொடர்ந்து திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு வழக்கு இதன் மூலம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக நீதிபதி உத்தரவிட்டார். 

Summary in English: In a recent turn of events, the Chennai High Court has quashed the defamation case against VCK leader Thirumavalavan, and it’s definitely making waves! This decision has sparked conversations across social media and among political circles. The case was initially filed over some comments that were deemed defamatory, but the court found that there wasn’t enough ground to keep it going.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.