நடிகர் விஷாலின் மத கஜ ராஜா படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது விஷால் கையில் பிடித்திருந்த மைக் நடுங்கிய வண்ணம் இருந்தது. இதை அடுத்து பல்வேறு கேள்விகள் எழுந்தது. அப்படி கை நடுக்கத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி யால் எடுக்கப்பட்ட மத கஜ ராஜா படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகை குஷ்பூ என பலரும் கலந்து கொண்டார்கள்.
இதைத் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டு வெளிவருமா? என்ற கேள்விகளுக்கு விடை கொடுக்கக்கூடிய வகையில் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதை அடுத்து இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட ரசிகர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தின் அறிவிப்பு வெளி வந்தது. அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தோம் என்று பழைய நினைவுகளில் நீந்த ஆரம்பித்து விட்டார்கள்.
இதனை அடுத்து விஷால் நடிப்பில் வெளிவரும் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இவர் மேடையில் பேசும் போது கை நடுக்கத்தோடும் சோர்ந்த முகத்தோடும் காணப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் இவரது நடை, உடை, பாவனை மிடுக்கு என்று எதுவுமே இல்லாமல் வயதான நபரை போல் இருந்ததும் பேசுவதும் ரசிகர்களின் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து விஷாலுக்கு என்ன ஆனது அவரது உடல்நிலை பிரச்சனை என்ன? என்று பல்வேறு கேள்விகள் சமூக வலைத்தளத்தில் எழுந்ததை அடுத்து பட குழுவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் விஷாலின் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை அதிக அளவு காய்ச்சல் இருந்த காரணத்தாலும் இந்த நிகழ்வை மிஸ் செய்யக்கூடாது என்று கஷ்டப்பட்டு வந்தார்.
மேலும் மேடையில் அதிக அளவு குளிர் இருந்த காரணத்தால் தான் அவருடைய கை நடுங்கியது என்று பட குழு விளக்கம் அளித்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் அவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட தொற்றுப் பிரச்சனை இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்தது.
எனவே விரைவில் அந்த நோயிலிருந்து குணமாகி பூரண நலம் பெற்று பழைய மிடுக்கோடு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் அனைவரும் இறைவனை வேண்டி வருகிறார்கள்.
Summary in English: At the Madha Gaja Raja pre-launch event, all eyes were on Vishal, and for good reason! When he stepped onto the stage, there was a noticeable moment that caught everyone’s attention—his hand was visibly shivering. You could almost hear the collective gasp from the crowd. It wasn’t just a casual appearance; it felt like something significant was happening.