தனியார் தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பிரபலமான ஆஸ்தான தொகுப்பாளினியாக திகழ்ந்த திவ்யதர்ஷினி என்கின்ற டிடி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. விவாகரத்தான இவரை ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்த விவகாரத்தைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம்.
திவ்யதர்ஷினி தொகுப்பாளினியாக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் சில சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். இவர் தன்னுடைய பள்ளி பருவத்தில் இருந்தே ஊடகப் பயணத்தை ஆரம்பித்து விட்டார்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான திகில் தொடரான தடயம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனினும் இவரை அடையாளப்படுத்தியது இவருடைய தொகுப்பாளினி பணி தான் என்று சொன்னால் மிகையாகாது.
இந்த சூழ்நிலையில் இவர் தன்னோடு இருந்த நட்பு வட்டாரத்தில் மிகச் சிறந்த நண்பராக இருந்த ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து பாதியிலேயே பிரிந்தார்.
இந்த சூழ்நிலையில் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி பற்றி தொகுப்பாளர் ரமேஷ் நல்லாயன் சில விஷயங்களை பேசி இருக்கிறார். அவரது பேச்சைக் கேட்டு ரசிகர்கள் பல அதிர்ந்து போய் விட்டார்கள்.
இதற்கு காரணம் இவருக்கு திவ்யதர்ஷினியோடு நெருங்கிய நட்பு இருந்துள்ளது .அந்த நட்பு இருந்த காரணத்தை அடுத்து திவ்யதர்ஷினி மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டதோடு அவரை நல்ல இன்ஸ்பிரேஷன் ஆகவும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் நாள் செல்ல செல்ல அவர் மீது இருந்த பிடிப்பு காதலாக மாறியதோடு இருவரும் வாழ்க்கையில் ஒத்துப் போனால் சிறப்பாக இருக்கும் என்று அவருடைய மனது பேசியது.
இதைத்தொடர்ந்து தன்னுடைய கிரஷை அவரிடம் கூறுவதற்கு பயந்த அவர் ஒரு கட்டத்தில் காதலை சொல்லிவிடலாம் என்று ஜோடி செட்டுக்கு சென்று இருக்கிறார். என்ன நடந்தாலும் இன்று கூறி விட வேண்டும் என முயற்சி செய்திருக்கிறார்.
இதை அடுத்து அங்கிருந்தவர்கள் திவ்யதர்ஷினிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட தகவல்களை கூறி இருக்கிறார்கள்.
அதைக் கேட்டு தனக்கு பேர் அதிர்ச்சியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காதலை சொல்லாமல் காலம் தாழ்த்தியதால் திவ்யதர்ஷினி தனக்கு கிடைக்காமல் போய்விட்டார் என்று வந்து இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ரமேஷ் நல்லாயன் கூறிய இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.
Summary in English: So, here’s a fun little story from the world of anchors! Ramesh Nallayan, the charismatic host we all know and love, once opened up about his crush on none other than Anchor Divyadharshini. Can you believe it? Picture this: Ramesh, with his signature charm and wit, casually dropping this bombshell during an interview. It was like watching a rom-com unfold right before our eyes!