Mrunal Thakur recently opened up about her experience working on the powerful film “Love Sonia,” and it’s nothing short of inspiring.
தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வரும் நடிகை மிருணாள் தாக்கூர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பொதுவாகவே திரை பிரபலங்கள் பேட்டியளிப்பதை வழக்கமாகக் கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்று விலை மாது உடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து கூறியிருக்கிறார்.
கீழ் இம்புட்டு பெரிய கேப் தேவையா..?
திரை உலகில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகை மிருணாள் தாக்கூர் எதற்காக விலை மாது உடன் பேச வேண்டும். இவர்களுக்கு இடையே என்ன தொடர்பு இருக்கிறது என்பது போன்ற பலவிதமான கேள்விகள் உங்கள் மனதில் ஏற்படலாம்.
அதற்கு உரிய பதில் என்னவென்றால் 2018 ஆம் ஆண்டு நடிகை மிருணாள் தாக்கூர் லவ் சோனியா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் சில காட்சிகளில் அவர் விலை மாதுவாக நடிக்க வேண்டி இருந்தது.
அந்த வகையில் இவருக்கு விலைமாது என்றால் என்ன? அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும்? மேலும் தினசரி வாழ்க்கையில் அவர்கள் என்னென்ன செய்வார்கள்? என்பதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது.
இதை அடுத்து தன்னுடைய உதவியாளர்கள் துணையோடு விலைமாது வசிக்கும் பகுதிக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருந்து அவர்களது விஷயத்தை நேரடியாகப் பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறார்.
விலை மாதுவின் பதிலால் அரண்ட மிருணாள் தாக்கூர்..
அந்த சமயத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் இந்த படத்தில் நடிக்க உதவியாக இருந்ததாக அண்மை பேட்டி ஒன்றில் விலைமாது உடன் தங்கி இருந்த சமயத்தில் ஒரு பெண்ணோடு பேசியதாகவும் கூறினார்.
அந்தப் பெண் அழகான முகத்தைக் கொண்டு இருந்ததோடு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு சினிமா நடிகையைப் போல இருந்தார். அவளின் குடும்ப சூழ்நிலை காரணமாக இருந்த தொழிலுக்கு வந்ததாக கூறியதை அடுத்து பல விஷயங்களை அவளோடு பகிர்ந்து கொண்டேன்.
நான் என்ன தான் பேசினாலும் அவளுடைய முக பாவனைகள் ஏதும் மாறாமல் அப்படியே இருந்தது. அது சோகமான விஷயமானாலும் சரி, சந்தோஷமான விஷயமானாலும் அவள் முகபாவம் அப்படியே இருந்தது.
இதை அடுத்து இதற்கான காரணம் என்ன என்று அவனிடம் கேட்டதற்கு நான் உயிரோடு இருக்க கூடிய ஒரு பிணம் என்று தடாலடியாக பேசியதோடு மட்டுமல்லாமல் யாராவது தங்களை காப்பாற்ற மாட்டார்களா? என்று நினைத்து எதிர்பார்த்து கதறி அழுதாக கூறினார்.
அதுமட்டுமல்லாமல் இதற்கு மேல் கதறி அழுது கண்ணீர் விடுவதற்கு கண்களில் நீர் இல்லை நான் அழுவதற்கோ.. சிரிப்பதற்கோ.. சோகப்படுவதற்கோ.. எந்தவிதமான சூழ்நிலையும் இல்லை. என் குடும்பத்திற்காக இந்த வேலையை செய்கிறேன்.
மேலும் எனக்கு என்று என்னுள் எந்த விதமான உணர்ச்சிகள் ஏற்படுவதே இல்லை .எனவே தான் என்னுடைய முகத்தில் அது தெரிவதில்லை என்று அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் பேசி இருந்தார்.
இதன் மூலம் அந்தப் பெண்ணின் வலி என்ன என்பது வார்த்தைகளால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கட்டிலுக்கு அடியில் ஒரு மிகப்பெரிய கேப் இருப்பதை பார்த்தேன்.
இதை அடுத்து இது என்ன உங்க கட்டிலுக்கு அடியில் ஒரு மிகப்பெரிய கேப் இருக்கிறது. ஆனால் கட்டில் உயரமாக இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய குழந்தை இங்கு தான் படுத்து தூங்குவான். வேறு யாருடனும் இருக்க மாட்டான். அவனுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்று கட்டளை சற்று உயரமாக வைத்திருக்கிறேன்.
அது மட்டுமல்லாமல் என் கணவரும் இங்கு கீழே தான் படுத்துக் கொள்வார் என்று கூறினார். இதை அடுத்து நான் எப்படி கணவன், குழந்தைகள் இருக்கும் போது இந்த தொழிலில் ஈடுபடுவீர்களா? என்று கேட்டேன்.
அதற்கு அவள் என் குழந்தையும் கணவரும் கீழே படுத்திருப்பார்கள். அப்போது இதெல்லாம் சகஜமாக நடக்கும் எனக் கூறியதோடு ஒரு நாளைக்கு 10 முதல் 15 பேர் வருவார்கள். ஒருவருக்கு 50 ரூபாய் வீதம் சம்பளம் பெறுவதாக கூறினார்.
இந்த அற்ப தொகைக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறார்களா? என்று நினைத்து என் கண்கள் குளமாகி விட்டது. இந்த படம் வெளிவந்த பிறகு என்னால் முடிந்த உதவியை அந்த பெண்ணுக்கு செய்தேன்.
இதுபோல பல பெண்கள் வேதனையோடு விருப்பமில்லாமல் அந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறிய பேச்சானது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.
Summary in English : Actress Mrunal Thakur recently opened up about her transformative experience while working on the film “Love Sonia.” She shared how stepping into the shoes of her character was both challenging and eye-opening. The film, which dives deep into the dark world of human trafficking, pushed her to explore emotions she hadn’t tapped into before.