நடிகை மல்லிகா திரையுலகில் பல்வேறு துணை கதாபாத்திரங்களையும் குண சித்திர வேடங்களையும் ஏற்று நடித்தவர். அந்த வகையில் தற்போது பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் உடன் நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
நடிகை மல்லிகா மிகச்சிறந்த துணை நடிகையாக விளங்குகிறார். இவரிடம் சர்கார் படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்போது முருகதாஸ் சார் என்னை பார்த்துவிட்டு ஒரு டயலாக் கொடுத்தார்.
அந்த சமயத்தில் என் வீட்டில் தனிப்பட்ட பிரச்சனைகள் அதிகளவு இருந்ததின் காரணத்தால் நான் மிகவும் சோகத்தில் மூழ்கி இருந்தேன். அந்த டயலாக்கை பேசுவதற்கு நான் மிகவும் சிரமப்பட்டதோடு வேதனையும் அடைந்தேன்.
என்னடா எவ்வளவு முயற்சி செய்தும் இந்த டயலாக் தனக்கு வரவில்லையே என்று பயந்தபடி என்ன பண்ணுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தேன்.
அந்த சமயத்தில் வேண்டாத கடவுளே இல்லை அனைத்து கடவுளையும் வேண்டினேன். அடுத்த நிமிடம் முருகதாஸ் சார் வந்தார். அம்மா உங்களுக்கு டயலாக் எதுவுமே இல்ல. விஜய் சார் உங்களை தூக்கி கொண்டு நடிக்கிறார் அவ்வளவுதான் என்று கூறினார்.
அப்போது எனக்கு தூக்கி வாரி போட்டது விஜய் சார் என்னை தூக்கிக்கொண்டு நடிக்கிறாரா? பொதுவாகவே நடிகர்கள் ஹீரோயினை தூக்கிக்கொண்டு நடிப்பதை மறுப்பார்கள்.
இன்னும் சில நடிகர்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு நடிப்பதை கூட கஷ்டம் என்று கூறியதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் விஜய் சார் என்னை தூக்கிக்கொண்டு நடிப்பாரா? என்ற கேள்வி எனக்குள் ஏற்பட்டது.
அதேசமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது படப்பிடிப்பு தளத்திற்கு சென்றோம். அங்கு ஒரே டைட்டில் அந்த காட்சி படமாக்கப்பட்டது. நான் பயந்து கொண்டு நின்று இருந்தேன் விஜய் சார் என்னை பார்த்து பயப்படாதீங்க அம்மா. நீங்க நல்லா என்னுடைய தோளில் கையைப் போட்டு பிடிச்சுக்கோங்க கீழே விழுந்திட போறீங்க என்று கூறினார்.
சரி சார் என்று நான் சொன்னது போலவே செய்தேன். எத்தனையோ நடிகர்கள் ஒரு குழந்தையை தூக்கி நடிக்க முடியாது என்று சொல்லும் போது விஜய் சார் என்னை தூக்கிக்கொண்டு நடித்தது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அதுவும் விஜய் சாரிடம் அவர் இப்படி பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு எளிமையான ஒரு மனிதன் படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடமும் சகஜமாக பழகுவார். அவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்.
Summary in English: Vijay Sarkar, the much-talked-about film, has been making waves not just for its gripping storyline but also for its standout performances. One of the shining stars in this movie is none other than Mallika, who plays a pivotal role alongside the lead. Fans have been buzzing about her incredible acting chops and how she brings depth to her character.