Wednesday , 22 January 2025

உடம்பை பார்த்து மோசமாய் பேசிய நெட்டிசனிடம் சீரியல் நடிகை கேட்ட உதவி..! அப்படி என்ன கேட்டாங்க..?

சீரியல் நடிகையான நடிகை ஹரிப்பிரியா இசை அண்மையில் பேசிய பேட்டி ஒன்றில் ரசிகர்களுடன் உரையாடும் போது அவருடைய உடல் தோற்றம் குறித்து வந்த எதிர்மறையான கருத்துக்களுக்கு பதிலளித்திருக்கிறார். அது பற்றி இக்கட்டுரையில் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

ஹரிப்பிரியா இசை உடல் எடை குண்டாகி விட்டதாகவும் ஆண்ட்டி போல மாறிவிட்டதாகவும் சில ஆசாமிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைக்க இருந்தார்கள். 

இதற்கு பதிலளிக்க கூடிய வகையில் ஹரிப்பிரியா இசை தெரிவித்திருக்கக்கூடிய கருத்துக்கள் இணையத்தில் தற்போது பெருமளவு பேசும் பொருளாக மாறி உள்ளது. அந்த வகையில் இவர் அந்த கேள்விக்கு மிகவும் நிதானமாக பதில் அளித்து இருக்கிறார். 

அது மட்டுமில்லாமல் அந்த பதில் அழுத்தம் திருத்தமாக இருந்ததோடு அவரது கருத்தை மிகத் தெளிவான முறையில் கூறியது பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒவ்வொரு மனிதனுக்கும் வயது ஆவது இயல்பான ஒன்றுதான். இதில் ஆண்டியாக இருந்தால் என்ன? வயசு ஆவது இயற்கை தானே இதை எப்படி தப்பாக சொல்ல முடியும். எல்லோருக்கும் வயசு ஆகத்தான் செய்யும் என கூறியிருக்கிறார். 

மேலும் இயற்கையாக நடக்கும் இதை குறை சொல்ல கூடாது என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்க கூடிய இவர் தனது உடல் எடை அதிகரிக்கு காரணம் காலில் ஏற்பட்ட காயம். இதனால் தான் என்னால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார். 

அத்தோடு ஒல்லியாக சிவப்பாக இருப்பதுதான் அழகு என்பதெல்லாம் கிடையாது. கருப்பு கலர் குண்டாக இருப்பது அழகு இல்லை என்று சொல்ல முடியாது எல்லாமே அழகுதான் எல்லோருமே அழகுதான் என்று சூப்பரான கருத்தினை சொல்லிவிட்டார். 

மேலும்  உடல் எடை  போன்ற வெளிப்புற தோற்றங்களை வைத்து ஒருவரை எடை போடுவது தவறான கண்ணோட்டம் என்பதை தெளிவாக தெளிவு படுத்தியதோடு எல்லோருக்கும் அழகு இருப்பது பற்றி பேசியது பலரையும் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. 

நேரலையில் ரசிகர் ஒருவர் அவரை ஆண்ட்டி என்று அழைத்ததற்கு இளமையாக இருக்க டிப்ஸ் கொடுங்கள் என்று பதில் அளித்தது நகைச்சுவையாகவும் அதே சமயத்தில் அந்த ஆசாமிக்கு தக்க பதிலடியாகவும் அமைந்திருக்கும். 

அத்தோடு ஹரிப்ரியாவின் இந்த பேச்சு பல முக்கியமான விஷயங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. சமூகத்தில் நடக்கும் பாடி ஷேமிங் உடல் தோற்றத்தை வைத்து மற்றவர்களை விமர்சிப்பது தற்போது வழக்கமாகி வருகிறது. 

அவர்களுக்கெல்லாம் சவுக்கடி கொடுக்கக் கூடிய வகையில் அவரது பதிலடி இருந்தது என்று சொன்னால் மிகையாகாது அவர்களின் தவறை சுட்டிக்காட்ட கூடிய வகையில் மிகவும் நேர்த்தியான முறையில் பதில் அளித்து இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் அழகு என்பதின் வரையறையை வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரின் அழகும் தனித்துவமாக இருக்கிறது என்பதை தனது தேற்றின் மூலம் தெளிவுபடுத்தி விட்டார். 

இவரின் இந்த வெளிப்படையான பேச்சும் புதிய அணுகுமுறையும் சமூக வலைதளங்களில் பாராட்டுதல்களை பெற்று வருவதோடு வயது குறித்து தவறான கருத்துக்களை கொண்டிருப்பவர்களின் மன நிலையில் கூட ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம். 

Summary in English: The internet can be a tough place, especially when it comes to body image and weight. Recently, Haripriya found herself in the spotlight as netizens voiced their opinions about her weight. While some comments were supportive, others were downright harsh. It’s wild how people feel they can weigh in on someone else’s appearance from behind a screen!

Check Also

போடுடா வெடிய.. எதிர்பார்க்காத சமயத்தில் ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் 2 புதிய சீரியல்..!

Hey there, Tamil serial fans! If you’re on the lookout for the latest buzz about “Manasellam” and “Getti Melam,” you’re in the right place! These shows have been making waves lately, and it’s no surprise why.