Wednesday , 22 January 2025

45 ஆவது வயதில் நெக்ஸ்ட் லெவலுக்கு போகும் சந்தானம்.. எவ்வளவு கோடி சொத்து தெரியுமா? 

ஆரம்பத்தில் சின்ன திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின் திரைப்படங்களில் நடித்த நடிகர் சந்தானம் பற்றி சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் திரை உலகில் தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் டைமிங் காமெடியால் ரசிகர்களின் மனதை கவர்ந்த சந்தானத்திற்கு 45 வயது ஆகிவிட்டது. 

இவர் தமிழ் சினிமாவில் தனது காமெடி திறமையால் அனைவரையும் கவர்ந்ததோடு பின்னால் ஹீரோவாக மாறி தனது திறமையை நிரூபித்து பல ரசிகர்களுக்கு சொந்தக்காரராக விளங்குகிறார். 

இவர் லொள்ளு சபா நிகழ்ச்சியில் தமிழ் சினிமா படங்களை ட்ரோல் செய்து ரசிகர்களை சிரிக்க வைத்ததை அடுத்து படங்களில் சிறப்பான நடிப்பை காட்டி பலர் மத்தியிலும் ஃபேமஸ் ஆனார்.

இவர் தற்போது டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவரது கடினமான உழைப்பு இவருக்கு மிகச்சிறந்த சொத்துக்களை சேர்த்து கொடுத்தது என்று சொன்னால் மிகையாகாது. 

இதனை அடுத்து இவர் தற்போது சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு ரூபாய் 85 கோடி முதல் 90 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சென்னையில் ஒரு சொகுசு பங்களா, ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட விலை உயர்ந்த கார்கள் இவரிடம் உள்ளது. 

இவர் 2004 ஆம் ஆண்டு உஷா என்ற நபரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு ஹாசினி மற்றும் நிபுண் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். 

ஜனவரி 21-ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்ட இவரது பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தன் திறமையால் சென்று மக்களை மகிழ்வித்து வரும் சந்தானம் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக மாறி வருவதோடு அவரது எதிர்கால படங்கள் எல்லாம் வெற்றி பெற வாழ்த்துக்கள் குவிந்தது. 

Summary in English: Santhanam, the beloved comedian and actor from India, has been making waves in the entertainment industry for years. But what’s really got everyone talking lately is his net worth, especially with his latest venture, DD Next Level. This project has not only showcased his incredible talent but also significantly boosted his financial standing.

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.