ஜில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவிற்கு டப்பிங் செய்த அனுபவத்தை பிரபல பின்னணி பாடகி சின்மயி அண்மை பேட்டியில் விரிவாக விளக்கி இருக்கிறார். அது பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த படத்தில் அவர் வசனம் பேசும்போது உங்க கூட நூறு வருஷம் வாழனும் என்ற வசனத்தை பேசிய போது எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து விரிவாக பேசி பலரையும் ஆச்சரியத்தில் தள்ளினார்.
மேலும் சின்மயி கூறுகையில் அழும் காட்சிகள் நடிப்பது மிகவும் எளிது அதுபோல சிரிக்கும் காட்சிகளும் சிறப்பாக செய்து விடலாம். ஆனால் அழாமல் அதேநேரம் உணர்வுபூர்வமாக ஒரு வசனத்தை பேசுவது என்பது மிகவும் கடினமான ஒன்று என்று சொல்லி இருக்கிறார்.
இதற்குக் காரணம் இந்த வசனத்தை பேசும்போது கண்ணீர் வடித்ததை உண்மையாக காட்ட வேண்டும் என்பதற்காக கிளிசரின் பயன்படுத்தியதாகவும் அதுவும் இரண்டு பாட்டில்கள் பயன்படுத்தியதாக சொல்லி இருக்கிறார்.
ஆனால் கிளிசரின் பயன்படுத்தியதால் கண் மற்றும் மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்ததால் மிகவும் சிரமப்பட்டதாகவும் கண்ணீர் விட்டபடியே டப்பிங் செய்ததும் அந்த வசனம் தத்துரூபமாக வரும் வரை தன்னை விடாமல் துன்பப்படுத்தியதாகவும் கூறினார்,
இந்த அனுபவம் தனக்கு மிகவும் கடினமாக இருந்ததோடு படத்தில் அந்த காட்சியைப் பார்த்ததும் மிகவும் தத்துரூபமாக வந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்து இருப்பதை அறிந்து ரசிகர்கள் வியந்து போனார்கள்.
இதைத் தொடர்ந்து பாடகி சின்மையின் இந்த அனுபவம் டப்பிங் ஆர்டிஸ்ட் எவ்வளவு கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இருந்தது.
ஒவ்வொரு படத்திலும் ஒரு காட்சியை நாம் எளிமையாக பார்த்தாலும் அதை எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டக் கூடிய வகையில் அவரது பேட்டி இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
மேலும் சினிமாவில் கிளிசரின் பயன்பாடு எந்த அளவு உள்ளது என்பதை தெரிவிக்க கூடிய வகையில் அவரது பேச்சை இருந்ததாகவும் இதன் மூலம் டப்பிங் கலைஞர்களின் கஷ்டங்கள் வெளியுலகத்திற்கு தெரிந்து விட்டதாகவும் ரசிகர்கள் பலர் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.
Summary in English: So, let’s dive into Chinmayi’s experience with dubbing for “Sillunu Oru Kadhal.” If you’re a fan of Tamil cinema, you probably know how crucial voice acting is in bringing characters to life. Chinmayi, with her incredible vocal talent, took on the challenge and shared some behind-the-scenes insights that are just too good not to talk about!