பொங்கல் அன்றே திரைக்கு வரும் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களுக்கு விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளி வருவதற்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால் அது பற்றிய விளக்கமான தகவலை இந்த பதிவில் நீங்கள் படிக்கலாம்.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் லைக்கா நிறுவன தயாரிப்பில் அனிருத் இசையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் திரை அரங்குகளுக்கு எப்போது வரும் என்று காத்திருக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித் மற்றும் திரிஷா இணைந்து இந்த படத்தில் நடித்திருப்பதோடு இந்த படத்தில் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் போன்ற நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளிவந்த ட்ரைலர் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததோடு இந்த படம் குறித்த ஆசையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே வெளிநாடுகளில் இந்த படத்திற்கான ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது. அந்த பிரீ புக்கிங்கில் இதுவரை சுமார் 4 லட்சத்துக்கு அதிகமான வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தப் பிரீ புக்கிங் வசூல் அஜித்குமாரின் வெளிநாட்டு சந்தையில் உள்ள செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதோடு ட்ரெய்லரில் வெளிவந்த பாடல்களுக்கும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதை அடுத்து அஜித்தின் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டுக்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார்கள். விடா முயற்சி திரைப்படம் ஆக்சன் திரில்லர் படமாக உருவாக்கி உள்ளதால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு எகிரி உள்ளது.
மேலும் இந்த படத்தில் அஜித்தின் ஸ்டைலிஷ் ஆன தோற்றமும், அனிருத்தின் துள்ளலான இசையும் மகிழ் திருமேனியின் இயக்கமும் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்துவிடும்.
எனவே பிரீ புக்கிங் கிடைக்க வரவேற்பு படத்தின் ஒட்டுமொத்த வசூலுக்கும் நல்ல துவக்கமாக அமையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
Summary in English: If you’re looking to dive into the world of unique foreign collections, you’ve got to check out the pre-booking options at Vidaa Muyarchi. This is where your travel dreams can really take off!