தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் மறுநாளே தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைக்க சொல்லிவிடுவேன் என்று கோபமாக கூறிய விஷயத்தை பேட்டி ஒன்றில் தமிழா தமிழா பாண்டியன் கூறி இருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
தமிழ் திரை உலகில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தன் சுய முயற்சியால் திரையுலகில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்ட தல அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளிவரவுள்ளது.
இந்தத் திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருக்க, இந்த படத்தை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி குட் பேட் அக்லி திரைப்படமும் வெளிவரமுள்ளதால் அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் குஷியோடு இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் அஜித்துக்கு பத்மபூஷன் விருதும் கிடைத்த உள்ளதை நினைத்து ரசிகர்கள் கொண்டாடி வரக்கூடிய சமயத்தில் தமிழா தமிழா பாண்டியன் அண்மை பேட்டி ஒன்றில் அஜித் ரசிகர் மன்றத்தை கலைக்க சொன்ன விதத்தைப் பற்றி பேசி இருக்கிறார்.
இதுவரை சுமார் 64 படங்களில் நடித்திருக்க கூடிய தல அஜித் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் எந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளாவிட்டாலும் ரசிகர் மன்றத்தை கலைத்திருந்தாலும் இவரை திரையில் காண பலர் தவம் கிடக்கிறார்கள்.
இந்நிலையில் துணிவு திரைப்படத்திற்கு பிறகு விடா முயற்சி திரைப்படம் வெளிவர உள்ள நிலையில் ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் கார் ரேஸ் என இரண்டிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் அண்மையில் துபாயில் நடந்த கார் ரேஸில் களம் இறங்கி பரிசினை வென்ற இவர் ரேஸ் நடக்கும் சீன்களில் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கட்டணத்தை கூறியிருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழல் நிலவிவரக்கூடிய சூழ்நிலையில் தனது ரசிகர் மன்றத்தை ஏன் கலைத்தார் என்பது குறித்த விஷயம் தற்போது தமிழா தமிழா பாண்டியன் மூலம் வெளிவந்துள்ளது.
இதை தமிழா தமிழா பாண்டியன் பேசும்போது ஒரு முறை கேம்ப்பா கோலா திடலில் அஜித்தின் ஷூட்டிங் இரவு 12 மணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அவரது ரசிகர்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு அங்கு இருந்தவர்கள் அனுமதி தர மறுத்ததை அடுத்து கோபமடைந்த அவர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து விட்டார்கள் அப்படி உள்ளே நுழையும் போது அங்கிருந்த லைட்கள் உடைந்து சேதம் அடைந்து ஷூட்டிங் கேன்சல் ஆனது.
இதனால் கோபமடைந்த அஜித்குமார் அடுத்த நாளை ரசிகர் மன்றத்தை கலைக்கிறேன் என்று சொல்லிவிட்டார் இதனை பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியதோடு அஜித்தின் மன்ற பெயரைப் பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் ரசிகர் மன்றத்தை கலைக்க காரணமாக அமைந்துவிட்டது என்று சொல்லி இருக்கிறார்.
Summary in English: AK’s fans are buzzing with excitement after he was honored with the prestigious Padma Bhushan award! It’s such a massive achievement, and you can just feel the pride radiating from his fanbase. Ajith himself took to social media to express his heartfelt gratitude, thanking everyone who has supported him along the way. His enthusiasm was infectious, and it’s clear that this recognition means the world to him.