13 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த மத கஜராஜா திரைப்படம் மாபெரும் வெற்றியை தந்ததை அடுத்து துருவ நட்சத்திரம் படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது। அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மதகஜராஜா திரைப்படம் போலவே துருவ நட்சத்திரம் திரைப்படம் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளித் திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
இந்த படத்தின் மீது இருக்கும் சில பிரச்சனைகள் காரணமாகத்தான் இந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிக் கொண்டு செல்கிறது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு கட்டாயம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டும் வெளிவரவில்லை.
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் இறுதிவரை என்ற திரைப்படம் திரைக்கு வரும் என்று ஆவலாக காத்திருந்து சோர்ந்து போன நிலையில் மத கஜராஜா திரைப்படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் துருவ நட்சத்திர படத்தை பார்க்க எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் துருவ நட்சத்திர படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான முழு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன் படத்தின் மீதுள்ள பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக தீர்ந்து வருவதால் வரும் சம்மருக்கு இந்த படம் ரிலீஸ் ஆகலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
இதை அடுத்து இந்த படத்தை காண எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரகசிய ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியான செய்தியாக உள்ளதால் வரும் மே மாதம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து துருவ நட்சத்திரம் படம் பற்றி வெளிவந்திருக்கும் இந்த புதிய அப்டேட் தான் இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
Summary in English: Gautham Menon has been buzzing with excitement about the release of “Dhruva Natchathiram,” and honestly, so are we! This film is one that fans have been eagerly waiting for, and Gautham’s unique storytelling style promises to deliver an engaging experience. He’s known for his knack for creating captivating narratives, and it looks like “Dhruva Natchathiram” will be no exception.