ராஜேஸ்வர் கந்தசாமி இயக்கி இருக்கும் குடும்பஸ்தன் திரைப்படத்தில் ஜெய் பீம் படத்தில் ராஜாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுதல் பெற்ற நடிகர் மணிகண்டன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் 4 நாள் வசூல் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஜெய் பீம் படத்தில் ராஜாக்கண்ணு கேரக்டரை செய்த நடிகர் மணிகண்டன் இந்த படத்தை தொடர்ந்து குட் நைட் லவ்வர் என தனக்கு ஏற்றபடி கதாம்சம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அவர் நடிப்பில் ராஜேஷ்வர் காளி சாமி இயக்கிய குடும்பஸ்தன் திரைப்படத்தில் குரு சோமசுத்தரம், சான்வி மேகனா, சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தின் நான்கு நாள் வசூல் பற்றி அறிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
வேறு ஜாதியை சேர்ந்த கதாநாயகியான சான்வி மேகனாவை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஹீரோ மணிகண்டன் நடுத்தர வர்க்கத்து குடும்பஸ்தராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்ற கூடிய கேரக்டரை பக்காவாக செய்திருக்கிறார்.
இவரின் அக்கா கணவர் சோமசுந்தரம் பெரிய கம்பெனியில் வேலை பார்த்து நல்ல சம்பளம் வாங்குவதால் குடும்பத்தில் அவருக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது.
வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாலும் குறைவான சம்பளம் பெறுவதாலும் மணிகண்டனுக்கு வீட்டில் சொல்லிக் கொள்ளும்படி ஏதும் கிடைக்கவில்லை. அதே சமயத்தில் ஆபீஸில் பிரச்சனை ஏற்பட்டு மணிகண்டனின் வேலை போய் விடுகிறது.
இந்த விஷயத்தை வீட்டுக்கு தெரியாமல் மறைத்து வைத்து வட்டிக்கு பணம் வாங்கி சம்பளம் கொடுத்து வருகின்ற விஷயம் அக்காவின் கணவர் சோமசுந்தரத்திற்கு தெரிய வர இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல பிரச்சனை வெடிக்கிறது.
இப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில் நகரக்கூடிய கதை அம்சம் கொண்ட இந்த குடும்பஸ்தன் திரைப்படம் கதை தேர்வு பக்காவாக இருப்பதால் ரசிகர்கள் படத்தை விரும்பி காணக்கூடிய நிலை உள்ளது.
மேலும் நடுத்தர வர்க்கத்தில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவர்கள் தினம் தினம் குடும்பச் செலவிற்காக எப்படி சிரமப்படுகிறார்கள் என்பதை சுவாரசியமான முறையில் காமெடி சென்டிமென்ட் கலந்து கொடுத்திருப்பதால் பட நல்ல விமர்சனத்தை பெற்றது.
இதை தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ள நிலையில் படம் முதல் நாளிலேயே ஒரு கோடி வசூல் செய்ததை அடுத்து இந்த படத்தின் வசூல் 3.3 கோடியாக இருந்தது.
நேற்று வேலை தினமாக இருந்த போதும் படம் ஒரு கோடி வசூலித்து நான்கு நாட்களில் குடும்பஸ்தன் திரைப்படத்தின் வசூல் ஆனது உலக அளவில் 7.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இதை அடுத்து இனி வரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதை எடுத்து நல்ல திரை அம்சம் உள்ள கதைகளுக்கு நிச்சயம் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்பதை இந்த படத்தின் மூலம் சொல்லலாம்.
Summary in English: Manikandan’s Kudumbasthan has kicked off its box office journey with a bang, raking in an impressive ₹ 7.35 Crore in just the first four days! Fans are flocking to theaters, and the buzz around the film is palpable. It’s exciting to see how well it’s performing right out of the gate, and it seems like audiences are really connecting with the story and characters. With such a strong start, it’ll be interesting to see how Kudumbasthan continues to fare in the coming weeks. If you haven’t checked it out yet, now might be the perfect time to grab some popcorn and experience what all the hype is about!