Monday , 3 February 2025

அடியாத்தி.. ஜான்வி கபூர் கட்டிய புடவையின் விலை..  வாய் பிளந்த ரசிகர்கள்..!

ஒரு குடும்பத்தை ஓட்டுவதில் இருக்கும் பொருளாதார சிக்கல்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இதுதான் உலகமா? என்று புலம்பக்கூடிய வகையில் தற்போது ஜான்வி கபூர் கட்டி உள்ள புடவையின் விலை தெரிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து வாய் பிளந்து இருப்பது பற்றிய விவரங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

சிவகாசியை பூர்வீகமாகக் கொண்ட முன்னணி தமிழ் நடிகையான ஸ்ரீதேவிக்கும் போனிகபூருக்கும் பிறந்த ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர். 

இவர் சமீபத்தில் கேரளாவில் சுற்றுலா சென்றிருந்தபோது அங்கு அணிந்திருந்த வெள்ளை நிற புடவையானது இணையத்தில் பரவி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. 

இந்தப் புடவை பார்ப்பதற்கு படு சிம்பிளாக தோன்றும் ஆனால் அதன் விலையை கேட்டால் அனைவரும் அதிர்ந்து போவார்கள். அப்படி அந்த புடவையின் விலை என்ன என்று நீங்கள் யோசிக்கலாம். 

ஜான்வி கபூர் தனது அம்மாவைப் போல சினிமாவில் அதிக அளவு ஆர்வம் காட்டியதை அடுத்து தடக் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இதை அடுத்து இவர் கோஸ்ட் ஸ்டோரீஸ், ரூகி, குட்லக் ஜெர்ரி, மிலி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். 

தற்போது நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் நடிக்கும் தீரா படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக விஷயங்கள் கசிந்துள்ள நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். 

அதுமட்டுமல்லாமல் போட்டோ சூட் நடத்தி தனது புகைப்படங்களை அவ்வப்போது பதிவேற்றி வரும் இவர் வீடியோக்களையும் வெளியிட்டு விடுவார். 

இதில் குறிப்பாக தனது காதலர் ஷிகர் பகாரியாவுடன் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடும்.

 இதனை தொடர்ந்து கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர் அணிந்து இருந்த சிம்பிளான வெள்ளை நிற புடவை இளசுகளின் இதயத்தை கொள்ளை கொண்டது. 

Anavila என்ற பிராண்டை சேர்ந்த இந்த புடவையின் விலை சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் என்ற தகவல்கள் வெளிவந்ததை அடுத்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள். 

இந்நிலையில் அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு மட்டுமல்லாமல் இவரது அம்மா ஸ்ரீதேவி ஹோலிவுட் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விஷயமும் பேசப்படுகிறது. 

அந்த வகையில் தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஓர் அந்தஸ்தை பிடித்து முன்னணி நடிகர்களோடு அவர் நடித்ததை அடுத்து இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய அளவு ரசிகர் வட்டாரம் இருந்தது. 

இவரது அம்மாவை போல திரைஉலகில் ஜொலிக்க முயற்சி செய்து வருவது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. 

Summary in English: Janhvi Kapoor has been turning heads lately, and her latest look in a stunning white suit is no exception! This outfit perfectly embodies elegance while keeping it super chic. The crisp white fabric highlights her radiant complexion, making her stand out effortlessly.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *