இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி தயாரிக்க இருக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க கால்ஷீட் பெறுவதில் ஏற்பட்டு இருக்கும் குழப்பமான சூழ்நிலையை அடுத்து இந்த படம் நகர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இயக்குனர் நடிகருமான சுந்தர் சி சினிமாவில் பல ஆண்டுகளாக மாஸ் காட்டி வரும் நிலையில் ஒரு கட்டத்தில் குஷ்புவை திருமணம் செய்து கொண்ட பிறகு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.
இவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த அரண்மனை 4 மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததை அடுத்து பொங்கல் அன்று வெளிவந்த மத கஜராஜாவும் சிறப்பான வசூலை இவருக்கு பெற்று தந்தது.
முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகுக்கு அறிமுகமான இவர் பன்முக திறமையை கொண்டிருப்பதை அடுத்து இவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 படம் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து கலகலப்பு 3 மற்றும் மூக்குத்தி அம்மன் 2 போன்ற படங்களை இயக்க திட்டமிட்டார்.
இதை அடுத்து அண்மையில் வெளிவந்த மத கஜராஜா திரைப்படம் மிகப்பெரிய அளவு வெற்றியை பெற்றதை அடுத்து மீண்டும் விஷாலோடு இணைந்து படம் செய்ய இருப்பதாக தகவல்கள் கசிந்தது உங்களுக்கு தெரியலாம்.
எனினும் இந்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரக்கூடிய நிலையில் இது குறித்து கேள்விப்பட்ட ஐசரி கணேஷ் மூக்குத்தி அம்மன் 2 படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக விஷாலுடன் இணையும்படி சுந்தர் சி இடம் கேட்டுக் கொண்டிருப்பதாக விஷயங்கள் வெளிவந்துள்ளது.
இதை அடுத்து இதற்குரிய பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில் சுந்தர் சி கூறிய விஷயம் பெரிய அளவு கோலிவுட் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.
அது மட்டுமல்லாமல் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்க உள்ள நிலையில் இந்த படத்தில் நயன்தாரா லீடிங் கேரக்டரில் நடிக்க உள்ளதாக முன்னதாகவே அறிவிப்புகள் வெளிவந்தது.
மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிக்க இருந்தாலும் படத்தில் சம்பளத்திற்கு பதிலாக சில சதவீத லாபத்தை நயன்தாரா கேட்டு ஒப்பந்தம் போட்டிருப்பதாக தெரிகிறது.
எனினும் இந்த படத்தை எடுக்க அடுத்த கட்ட வேலைகளை செய்ய நயன்தாரா ஒத்துழைக்காத நிலை ஏற்பட்டதை அடுத்து படத்திற்கான கால்ஷீட் கொடுக்காத நிலையில் படப்பிடிப்பின் ஷூட்டிங் தள்ளிப் போகிறது.
இதை அடுத்து ஐசரி கணேசன் தன்னிடம் முதலில் இந்த படத்தை முடித்து தரும்படி கேட்டிருப்பதை அடுத்து நயன்தாராவிடம் கால்ஷீட் வாங்கி தருமாறு சுந்தர் சி வற்புறுத்தி இருப்பதாக விஷயங்கள் வெளிவந்துள்ளது.
இதை அடுத்து மூக்குத்தி அம்மன் 2 படம் இடியாப்ப சிக்கலில் சிக்கி இருப்பதாகவும் சுந்தர் சி இடமே தனது கோக்கு மாக்குத்தனத்தை நயன்தாரா காட்டுவதாகவும் இணையம் முழுவதும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகைகள் இதனை பேசும் பொருளாக்கி பேசி வருகிறார்கள்.
Summary in English: So, there’s been quite a buzz around the shooting of “Mookuthi Amman 2,” especially with the dynamic duo of Sundar C and Nayanthara coming together. Fans were super excited, but it seems like things haven’t gone as smoothly as everyone hoped. There have been some behind-the-scenes issues that have popped up, causing delays and a bit of drama on set.