சினிமா உலகில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் வேலைகள் பற்றி ஹேமா கமிஷன் விரிவாக பேசியது நினைவில் இருக்கலாம். இதை அடுத்து தற்போது பிரபல தமிழ் நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள திரை உலகில் தனக்கு நேர்ந்த இரண்டு அனுபவங்கள் குறித்து கூறியிருக்கிறார். அது பற்றிய பதிவினை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஹேமா கமிஷன் வெளிவந்த பிறகு திரை உலகில் நடிக்கும் நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த அவலங்கள் பற்றி ஓப்பனாக பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள திரை உலகில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றி பேசி இருக்கிறார்.
இவர் தனது கருத்தை பதிவு செய்ததை அடுத்து நடிகர் ஜீவா பாலியல் தொல்லைகள் குறித்து மலையாள திரைகளில் மட்டும்தான் நடக்கிறது என்றும் தமிழ் திரை உலகில் அதற்கு வாய்ப்பில்லை என்று சொன்ன விஷயத்தை அவரது கருத்திற்கும் தனது கண்டனத்தை பலமாக தெரிவித்து இருக்கிறார்.
மேலும் நேரலை ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும்போது ஒரு மூத்த இயக்குனர் என்னை படைப்பிடிப்பு தளத்தில் தொடர்ந்து தொல்லை செய்து வந்தார். இறுதியில் என்னை அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டார் என்பதை ஓபன் ஆக பேசிவிட்டார்.
மற்றொரு சம்பவத்தில் ஒரு பெரிய இயக்குனர் என்னிடம் மிகவும் தவறாக நடந்து கொண்டார். நான் உடனே அவரைக் கண்டித்தேன் ஒட்டுமொத்த படக்குழுவும் எனக்கு ஆதரவாக நின்றது என்ற விஷயத்தையும் உடைத்தார்.
இந்த அனுபவங்கள் மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கக்கூடிய சவால்களை வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய வகையில் இருந்தாலும் தவறான நடத்தைக்கு எதிராக குரல் கொடுக்கும் தைரியம் பாராட்டத்தக்கது.
எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒட்டுமொத்த குழுவும் ஆதரவாக நின்று குரல் கொடுப்பது மலையாள திரை உலகின் நல்ல மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகளை காட்டுவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
மேலும் நடிகர் ஜீவா மலையாள திரை உலகில் மட்டும் தான் பாலியல் தொல்லைகள் நடக்கிறது. தமிழ் சினிமாவில் இல்லை என்று கூறிய கருத்தை வன்மையாக கண்டித்தார்.
திரை உலகில் பாலியல் தொல்லைகள் நடக்காது என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும் நீங்கள் பெண்களிடம் பேசினீர்களா? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்.
அத்தோடு நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மற்றும் சினிமா கூட்டுறவு பெண்கள் ஆகியவற்றின் முயற்சிகளை பாராட்டி இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள திரை உலகம் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதில் தைரியமாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
இதற்காக இன்னும் அதிகபட்ச அளவு வேலை செய்ய வேண்டி உள்ளது என்பதை வலியுறுத்தி இருக்கக்கூடிய இவர் சினிமாவில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேலாகும்.
அத்தோடு ஆழமாக வேரூன்றி இருக்கும் ஆணாதிக்கத்தை அடியோடு வேரறுக்க வேண்டும் என பேசி இருக்கும் வெளிப்படையான பேச்சு திரை உலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை இணையத்தில் விவாதிக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது.
Summary in English: In a recent open talk, Lakshmi Ramakrishnan shared some insightful thoughts on the ever-evolving world of cinema and the adjustments that come with it. She emphasized how important it is for filmmakers and actors to adapt to new trends and technologies while staying true to their artistic vision. It’s all about finding that sweet spot between innovation and tradition.