Sai Pallavi recently opened up about her heartfelt experience while working on the film “AMARAN,” and it’s a must-read for fans! She shared how deeply connected she felt to her character, which really shows in her performance.
தீபாவளி அன்று தமிழ் திரை உலகில் வெளி வந்த திரைப்படங்களில் மெகா ஹிட் ஆக மாறி இருக்கும் திரைப்படம் அமரன். இந்தத் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்திருந்தார்கள்.
மேலும் ஒரு பயோபிக் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தை சிவகார்த்திகேயனும் அவருடைய மனைவி கேரக்டரை சாய் பல்லவியும் செய்திருந்தார்கள்.
அந்தப் படத்தை பார்த்துட்டு யாருமே என் கூட பேசல..
இளம் வயதில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வெளி வந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ளது.
இந்த திரைப்படமானது கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ரிலீசானதோடு மட்டுமல்லாமல் கடந்த ஐந்து நாட்களில் சுமார் 170 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது. இதை அடுத்து சென்னையில் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் நடிகை சாய் பல்லவி கலந்துகொண்டு பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய அலையை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம்.
இதற்குக் காரணம் அவர் பேசும் போது ஒரு சில படங்கள் மட்டுமே மிகச் சிறப்பான படங்களாக அனைவருக்கும் அமையும். அப்படி எனக்கு அமைந்த படம் தான் இந்த அமரன் திரைப்படம் என்று கூறினார்.
மேலும் இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நபரும் தங்களுடைய பங்கை மிகச் சிறப்பான முறையில் செய்திருப்பதால் தான் இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை பெற்றிருந்தாலும் அனைவருக்கும் ஒரு ஆத்ம திருப்தி தரும் படமாக உள்ளது.
என் நிலையில் இருந்த திரைப்படத்தை பார்த்து விட்டு என்னுடைய தோழி எனக்கு ஒரு மெசேஜ் செய்திருந்தார். அந்த மெசேஜில் தன்னுடைய மறைந்து போன அப்பாவை இன்னும் திட்டிக்கொண்டே இருப்பதாக கூறினார்.
ட்ரெண்டிங் ஆகும் சாய் பல்லவி பேச்சு..
அத்தோடு இந்த படத்தினை பார்த்த பிறகு என்னுடைய அம்மாவின் கண்ணோட்டத்தில் இருந்து என்னுடைய அப்பாவை பார்த்ததை அடுத்து என் அப்பாவின் மீது நான் கொண்டு இருந்த கோபம் முற்றிலும் காணாமல் போய்விட்டது.
இதை அடுத்து இந்த படத்தை பார்த்த பலரும் என்னிடம் பேசவில்லை. அதற்கு பதிலாக என்னை கட்டிப்பிடித்து அழுதார்கள் என்று கூறிய இந்த பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதை அடுத்து இவர்களுக்கு இன்னும் இது போல பல நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று ரசிகர்கள் சொல்லி வருவதோடு நிச்சயம் அது நடக்கும் என்று சொல்லலாம்.
Summary in English : Sai Pallavi recently opened up about her emotional journey while filming “AMARAN,” and it’s truly heartwarming! She shared how the story resonated with her on a personal level, making every scene feel incredibly authentic. The actress mentioned that diving into her character allowed her to explore a range of emotions, from joy to sorrow, which made the whole experience both challenging and rewarding.