Thursday , 23 January 2025

இது மாதிரி சாவு யாருக்கும் வரக்கூடாது..டெல்லி கணேஷ் மகன் அதிர்ச்சி செய்தி..!

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானதை அடுத்து இந்த மறைவு செய்தியை கேள்விப்பட்டு தமிழக மக்கள் ஆழ்ந்த அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியின் சீரியல்களிலும் தனது அபார திறமையை வெளிப்படுத்தி பெரிய அளவு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த நடிகர் டெல்லி கணேஷ் பற்றி அதிக அளவு பகிர வேண்டாம். 

எத்தகைய கேரக்டர் ரோல் கொடுத்தாலும் அந்த கேரக்டரை அப்படியே தத்துவமாக நடிக்கக்கூடிய மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் இவர் பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். 

தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்க கூடிய இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர். மேலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து அனைவரது மத்தியிலும் புகழ்பெற்றவர். 

80 வயது ஆனாலும் வெப் சீரியல்களில் ஆர்வம் காட்டி நடித்து வந்த இவர் ஹிந்தியில் ஒரு வெப் சீரியலில் நடித்திருக்கிறார். இந்த வெப் சீரியலானது மிக விரைவில் வெளிவர உள்ளது. 

மேலும் இவர் அண்மையில் வெளி வந்த இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நேற்று நவம்பர் 9-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் இவர் உயிர் இழந்தார். 

இதுகுறித்து இவருடைய மகன் கொடுத்த பேட்டியில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. 

இதில் தனது அப்பாவிற்கு மோசமான உடல்நல பாதிப்பு ஏதுமில்லை 80 வயது என்பதால் அவ்வப்போது சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்படும் அதற்காக மருத்துவமனை சென்று சரி செய்து விடுவோம். 

ஆனால் இப்படி திடீர் என யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் இந்த அசம்பாவிதம் நடக்கும் என்று நினைக்கவில்லை. ஒருவேளை இவ்வாறு உடலுக்கு முடியாமல் சீரியஸ் ஆக இருந்திருந்தால் காப்பாற்ற முயற்சி செய்திருப்போம். ஆனால் எங்களால் நம்ப முடியாத அளவு இவருடைய மரணம் உள்ளது. 

நேற்று இரவு எங்களிடம் நன்றாக பேசிவிட்டு தான் தூங்க சென்றார். அப்போது ஒரு மாத்திரை கொடுக்க வேண்டும் என்று அவரை எழுப்ப முயற்சி செய்தோம். அப்போது அசைவற்ற நிலையில் அவர் இருந்தார். 

உடனே மருத்துவரை அழைத்து பார்த்த போது அப்பா இறந்து விட்டார் என்று கூறினார்கள். இப்படி ஒரு இறப்பு யாருக்குமே வரக்கூடாது. எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 

மேலும் இந்த துயரத்தில் இருந்து எப்படி நாங்கள் மீள போகிறோம் என தெரியவில்லை. அப்பாவின் உடல்நிலை குறித்து முன்னரே எங்களிடம் டாக்டர் தெளிவாக சொல்லி இருந்தால் அதற்கு ஏற்றது போல் இருந்திருப்போம். 

எனினும் அவர் உடல் நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை அவருடைய மறைவு எதிர்பார்க்காத ஒன்று நாளை காலை அவருடைய இறுதிச்சடங்கு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். எங்களுடைய உறவினர்கள் எல்லாம் வந்து சேர வேண்டியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் நடிகர் சங்கத்திலும் பல வர வேண்டி இருக்கிறது. அதன் பிறகு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என டெல்லி கணேசன் மகன் பேசியிருக்கிறார்.

Summary in English : The passing of actor Delhi Ganesh’s son has hit the film industry and his fans hard. It’s never easy to say goodbye to someone so young, and this loss resonates deeply within the community. Delhi Ganesh has been a beloved figure in cinema, known for his incredible talent and warmth, so losing a part of that legacy is truly heartbreaking.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.