Wednesday , 22 January 2025
Christopher Nolan

புதிய ஐமேக்ஸ் தொழில்நுட்பம்.. மீண்டும் பிரம்மாண்ட மிரட்டலுக்கு தயாராகும் நோலன்!!

கிறிஸ்டோபர் நோலன் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் நவீன ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறார்.

ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்களில் கிறிஸ்டோபர் நோலன் பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அவரது படம் ஒவ்வொரு படமும் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டக்கூடிய அளவு சிறப்பாக இருக்கும்.

அந்த வரிசையில் ஸ்பைடர் மேன் புகழ் டாம் ஹாலண்ட் மற்றும் மாட் டாமன் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். மிசன் இம்பாசிபிள் பாணியில் ஸ்பை திரில்லராக உருவாக உள்ளதாக சொல்லப்படும் இந்த திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவரலாம். 

Christopher Nolan

ஐ மேக்ஸ் திரைப்பட பிரியர்கள் அனைவரும் அறிந்த திரைப்பட தொழில்நுட்பம் வழக்கமாக  2.40:1 என்று இல்லாமல் 1.90:1 என்ற ரேஷியோவில் அகலமான பெரிய திரை கொண்ட ஐமேக்ஸ் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்த பட உள்ளது. 

இன்னும் உங்களுக்கு நன்றாக தெரிந்து கொள்ள தமிழ் சினிமாவில் தற்சமயம் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி திரைப்படம் முழுவதுமே இந்த ஐமேக்ஸ் தொழில்நுட்ப கேமராவில் தான் உருவாகி வருகிறது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 

இந்த ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தை உலக சினிமாவில் பயன்படுத்தியவர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன். எனவே தான் இவரின் திரைப்படத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் படையை உள்ளது என்று சொல்லலாம். 

இதை அடுத்து இவர் அடுத்ததாக இயக்கவிருக்கும் திரைப்படத்தில் இதுவரை பயன்படுத்தப்படாத ஐமேக்சின் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக ஐமேக்ஸ் நிறுவன சிஇஓ ரிச் கெல்போனட் கூறியிருக்கிறார். 

மேலும் இது குறித்து இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் பேசும்போது எப்போதும் புதிய பரிசோதனைகளை செய்ய முயற்சி செய்வதாகவும் உதாரணமாக டெனெட் படத்தில் அவர் நாயகனின் காலம் பின்னோக்கி செல்வது போல் படம் பிடித்திருப்பார்.

இவர் எப்போதுமே தனது படங்களில் கதைகளை கூறுவதற்கு புதிய முறையைத்தான் உருவாக்குவார் இதை அடுத்து ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஐமேக் நிறுவனத்தை அணுகி புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

Christopher Nolan

அந்த வகையில் தற்போது முன்பை விட இன்னும் அதிகமாக அவர் சாதிக்க இந்த தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும். வழக்கமான சினிமாக்களை விட ஐ மேக் தொழில்நுட்பத்தில் படப்பதிவு செய்ய செலவு அதிகமாகும். 

எனவேதான் இதை பயன்படுத்த கடந்த 2008 ஆம் ஆண்டு டார்க் நைட் திரைப்படத்தில் ஐமேக்ஸ் 65 mm கேமராவை பயன்படுத்தியதால் செலவு அதிகரிக்கும் என வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அதை பயன்படுத்த மறுத்தது. 

ஆனால் இவரோ அந்தத் தொழில்நுட்ப கேமரா தான் வேண்டும் என கேட்டு வாங்கி படத்தில் முடித்ததை அடுத்து அந்த படத்தின் ஒளிப்பதிவு பாராட்டுதல் பெற்றது. 

எனவே புதிய படத்தில் எத்தகைய பெருமைப்பினை இவர் ஏற்படுத்தப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Summary in English: Nolan has always been a champion of practical effects and immersive experiences, and this time he’s taking it to another level. The new IMAX tech allows for crisper images and more vibrant colors that pull you right into the action. Imagine watching one of his intense scenes unfold in larger-than-life detail—it’s bound to be a cinematic experience like no other!

Check Also

அடி போடு தூள்..Mona 2 திரை விமர்சனம்..

So, let’s dive into the much-anticipated "Moana 2"! If you loved the first movie, you're in for a treat. The sequel picks up where we left off with our favorite wayfinder.