பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ் தனது நான்காவது கணவரை விவாகரத்து செய்தது குறித்த தகவல்.
ஜெனிபர் லோபஸ் என்று அமெரிக்க நடிகை பாடகியாகவும் இசை பதிவு தயாரிப்பாளராகவும் நடன கலைஞராகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் தொலைக்காட்சி தயாரிப்பாளராகவும் விளங்குகிறார்.
பொதுவாகவே ஹாலிவுட் திரைப்படங்களை பொருத்தவரை நடிகைகளுக்கு திருமணம் நடப்பதும் விவாகரத்து நடப்பதும் சட்டையை மாற்றுவது போல் தான் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
அப்படித்தான் 40 ஆண்டுகளாக சினிமாவில் சூப்பர் ஹீரோயினியாக நடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஜெனிபர் லோபஸ்.
55 வயதாகக் கூடிய இவர் 1986 ஆம் ஆண்டு முதல் திரை உலகில் நடித்து வருகிறார் தற்போது நிலவரப்படி இவருக்கு ஒரு படத்திற்கு 20 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 167 கோடி ரூபாய் சம்பளமாக கிடைக்கிறது.
ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற இவர் நான்காவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தனது நான்காவது கணவர் பென் அப்ஃளெக்கை விவாகரத்து செய்ய விண்ணப்பித்திருக்கிறார்.
இவர்களது திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்ததை அடுத்து இவர்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்து பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.
Summary in English: Jennifer Lopez has once again made headlines, and this time it’s for her split from her fourth husband. It seems like just yesterday we were all swooning over their whirlwind romance, but now the news is out that they’ve decided to part ways. Fans are left wondering what went wrong in this high-profile relationship.