ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் அதிரடி காட்டி வருகிறார்கள். அது குறித்து இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளில் ஆதிக்கம் அதிகளவு நிலவுவதால்
அங்கு அடிக்கடி தேடுதல் வேட்டை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இன்று காலை 5 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மூலம் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
அந்த வகையில் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் இன்று காலை தேடுதல் வேளையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த அதற்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள்.
இந்த தாக்குதலின் போது மொத்தம் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்த சம்பவமானது குல்காம் மாவட்டத்தில் கதர் பகுதியில் நடந்ததாகவும் தெரியவந்துள்ளது இது குறித்து மேலும் விவரங்களை விரைவில் காவல்துறை சார்பில் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.
Summary in English: In a recent operation in Jammu and Kashmir, security forces successfully eliminated five terrorists, marking a significant blow to militant activities in the region. This operation highlights the ongoing efforts of law enforcement to maintain peace and security. The area has seen its share of turmoil, but these decisive actions are crucial for restoring safety for the local communities.