Wednesday , 22 January 2025
election

சமாஜ்வாதி கட்சியை தெறிக்க விட்ட யோகி ஆதித்யநாத்!! காரசாரமான உபி இடைத்தேர்தல்!

உத்திர பிரதேஷ் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை பின்னுக்கு தள்ளக்கூடிய வகையில் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டது. 

உபியில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு பாரம்பரியத்தை மதித்தல் போன்றவற்றை சீரிய முறையில் சிறப்பாக செய்து வருகிறார். 

2014-க்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய பாதுகாப்புடன் விளையாடி அதை அடுத்து நமது பாரம்பரியத்தை அவமிபத்தித்தது என்று தற்போது மாநிலத்தின் பெரிய அளவிலான வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதோடு பாரம்பரியம் மதிக்கப்படுவதாக பேசினார். 

அது மட்டுமல்லாமல் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் அந்த கோயிலை பார்த்து ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும் விதத்தில் நம் பாரம்பரியம் பறைசாற்றப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த பாரம்பரியத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதும் அவமதித்து தான் வந்துள்ளது. இவர்களின் உண்மையான மரபு கான் முபாரக், அத்திக் அகமது மற்றும் முக்தார் அன்சாரி தான். 

ஆனால் சமாஜ்வாதி கட்சி டாக்டர் லோகியா மற்றும் ஆச்சாரியா நரேந்திர தேவின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளில் இருந்து விலகிச் சென்று விட்டது. எனவே தான் அவர்கள் மகாராஜா சுஹேல் தேவின் நினைவிடத்திற்கு செல்வதில்லை.

அப்படி செல்லக்கூடிய பட்சத்தில் அவருக்கு முஸ்லிம் வாக்கு நழுவி விடும் என்ற அச்சம் உள்ளது என முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சமாஜ்வாதிக்கட்சியை தெறிக்க விடக்கூடிய வகையில் பேசி இருக்கிறார். 

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்பேத்கார் நகரின் கதேரி தொகுதி வேட்பாளர் ராம்ராஜ் நிஷாந்த் மற்றும் மெர்சார் போரின் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசினார். 

தொடர்ந்து தற்போது மாநிலத்தில் பெரிய அளவிலான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி இருக்கும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சியை அனைவரும் அறிந்திருப்பார்கள் என்று சொன்னார். 

இது தொடர்பாக பேசும் போது முதியோர் ஓய்வூதியம் ஆதரவற்றோர் ஊனமுற்றோர் ஓய்வூதியம் ஆகியவற்றுடன் இலவச சமையல் எரிவாயு போன்றவற்றை ஊற்றி அரசு வழங்கி வருகிறது எனவே நாங்கள் சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற இலக்கோடு செயல்படுவதாக கூறியிருக்கிறார். 

மேலும் சமாஜ் வாட்ச் ஆட்சியில் சைஸை குடும்பத்தாருக்கும் பெரிய மாபியா குடும்பத்தாருக்கும் மட்டுமே வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சொன்ன அவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களாக திகழ்ந்த இருவரை கொன்ற கொடூர மாபியாக்கள் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கழுத்தில் மாலையாக இருந்தவர்கள் என்றார். 

ஆனால் இன்று இந்த மாநிலம் மாபியாக்கள் பயத்தில் இருந்து விடுபட்டிருக்கிறது ஊரடங்கு இல்லை கலவரம் இல்லை இதுதான் புதிய இந்தியாவின் புதிய உத்தரப்பிரதேசம். 

எனவே சமாஜ்வாதி கட்சியில் குடும்ப அரசியலுக்காக ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது. அவர்கள் ஒவ்வொருவரும் வாக்குக்காக ஏங்க வேண்டும் என்று அதிதீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு அனைவரையும் அசத்தி விட்டார்.

Summary in English: In a recent rally, Uttar Pradesh Chief Minister Yogi Adityanath didn’t hold back when it came to criticizing the Samajwadi Party. He took aim at their policies and questioned their track record, highlighting what he sees as failures in governance. Yogi’s fiery speech resonated with many supporters, who appreciated his straightforward approach. The CM emphasized the importance of development and security in the state, arguing that the opposition party hasn’t delivered on these fronts.

Check Also

வணங்காத எழுத்தாளர்! மேடையிலேயே முதல்வர் பினராயி விஜயனை கண்டித்த எம்.டி வாசுதேவன்..!

It’s a sad day for the literary world as we mourn the loss of veteran Malayalam writer M.T. Vasudevan Nair, who has passed away.