மணிப்பூர் மாநிலத்தில் ஜிரிபம் மாவட்டத்தில் மாயமான ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து மாபெரும் வன்முறை வெடித்துள்ளது.
பாஜக ஆட்சி நடந்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பீரன்சிங் உள்ளார். இந்த மாநிலம் ஆனது அதிக அளவு பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது.
மேலும் இந்த பகுதியில் இருக்கும் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு இருந்து கடும் மோதல்கள் ஏற்பட்டு வன்முறைகள் நடந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.
இதை அடுத்து இந்த மாநிலத்தில் பலர் கொல்லப்பட்ட நிலையில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதனை அடுத்து வன்முறை குறைந்து இயல்பு வாழ்க்கையை நோக்கி இன்னும் திரும்ப முடியாத நிலையில் பல இடங்களில் பதட்டம் நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில் தான் மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் மாவட்டத்தில் மாயமான ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டது இவர்கள் ஆறு பேரும் மைத்தேயி இனத்தைச் சேர்ந்தவர்கள்.
எனவே இவர்களை குக்கி இனத்தவர்கள் கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது எனவே இந்த ஆறு பேருக்கும் நீதி கேட்டு மைத்தேயி மக்கள் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தின் போது அங்கு இருந்த டயர்கள் எரிக்கப்பட்டதோடு எம்எல்ஏக்களின் வீடுகள் முற்றுகை இடப்பட்டு சேதப் பட்டதால் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டது.
இதை அடுத்து பதட்டத்தை குறைப்பதற்காக மணிப்பூர் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருக்கும் ஏழு மாவட்டங்களில் கால வரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் தேவையில்லாமல் வீண் வதந்திகள் பரவாமல் இருக்க சமூக வலைத்தள சேவைகள் ஏழு நாட்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் மும்மரம் காட்டி வருகிறார்கள்.
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மாவட்டத்தில் 4.30 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இதில் சுகாதாரம், மின்சாரம், பெட்ரோல், உள்ளாட்சித் துறைகள், மீடியா, எலக்ட்ரிக் மீடியா, நீதிமன்ற பணியாளர்கள், விமான பயணம் மேற்கொள்பவர்கள் போன்றவர்களுக்கு மட்டும் இந்த ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து இந்த போராட்டத்தின் நகர்வு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Summary in English: In the wake of some shocking events in Manipur’s Jiribam district, tensions have been running high. Following the discovery of six bodies, protests erupted, leading authorities to impose a curfew in Imphal West and East. It’s a tough situation for everyone involved, especially for those living in these areas who are now facing restrictions on movement.