Wednesday , 22 January 2025
Gujarat Earthquake

அலறிய மக்கள் குலுங்கிய பூமி குஜராத்தில் இரவு நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.2 பதிவு..

குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்று இரவு ரிட்டர் அளவில் 4.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது இது குறித்த தகவல். 

வடக்கு குஜராத் மாவட்டங்களான பனாஸ்கந்தா, பதான், சபர்கந்தா, மேசானா உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சொல்லப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் நேற்று இரவு 10 மணி 15 நிமிட அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் அனைத்தும் லேசாக குலுங்கியதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் உருண்டு விழுந்தது. 

இந்த நிலநடுக்கத்தை மக்கள் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை உணர்ந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியே வந்து வெட்ட வெளியில் இருந்தார்கள். 

Gujarat Earthquake

குஜராத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஆனது காந்தி நகரில் உள்ள நில அதிர்வு தொடர்பான ஆய்வு நிறுவனம் உறுதி செய்திருப்பதோடு 4.2 என்ற ரெக்டர் அளவில் இரவு 10.15 மணி அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் பதான், பகுதியில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் 13 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. 

நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குஜராத்தில் எந்த ஒரு பெரிய உயிர் சேதமும் பொருள்சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் பனாஸ் ஸ்கந்தா, பதான், சபர்கந்தா,மோசானா உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருந்தார்கள். 

Gujarat Earthquake

குஜராத்தை பொருத்த வரை அந்த மாநிலம் அவ்வப்போது நலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது. 200 ஆண்டுகளில் 9 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தின் போது கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 1900-க்கு மேலான ஒரு பலியான 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள் இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

Summary in English: Hey there! So, if you haven’t heard yet, Gujarat just experienced a little shake-up with an earthquake that registered 4.2 on the Richter scale. It jolted four districts, leaving everyone buzzing about it. While earthquakes can be pretty scary, it’s important to remember that this one was on the lighter side.

Check Also

வணங்காத எழுத்தாளர்! மேடையிலேயே முதல்வர் பினராயி விஜயனை கண்டித்த எம்.டி வாசுதேவன்..!

It’s a sad day for the literary world as we mourn the loss of veteran Malayalam writer M.T. Vasudevan Nair, who has passed away.