ஜெர்மனியில் கிறிஸ்மஸ் மார்க்கெட்டில் மோசமான விபத்து ஒன்று நடந்துள்ளது அந்த விபத்துக்கு குறித்து இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
உலகெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கலைக்கட்டி வரக்கூடிய வேலையில் ஜெர்மனி நாட்டில் கிறிஸ்மஸ் மார்க்கெட்டில் மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் திரண்டு இருந்த மக்கள் மீது தாறுமாறாக மோதி 5 பேர் கொல்லப்பட்ட நிலையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.
இந்த கொடூர சம்பவத்தில் இந்தியர்களும் காயம் அடைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்து அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.
கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்காக தங்கள் வீடுகளை அழகுபடுத்தி வரும் மக்கள் அனைவரும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கிறிஸ்மஸ் மார்க்கெட்டுகள் நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே பிரத்தியேகமாக பல மார்க்கெட்டுகள் சர்வதேச நகரங்களில் அமைக்கப்படுகிறது அங்கு சென்று மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம்.
அந்த வகையில் ஜெர்மனியில் உள்ள மாக்டேபர்க் என்ற பகுதியில் கிறிஸ்மஸை முன்னிட்டு சிறப்பு சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தச் சந்தையில் வெள்ளிக்கிழமை இரவு ஷாப்பிங் செய்ய பல நூறு பேர் குவிந்திருந்தார்கள்.
அந்த சமயத்தில் எதிர்பார்க்காமல் இருந்த வேலையில் கார் ஒன்று கூட்டத்தில் பாய்ந்து விபத்தினை ஏற்படுத்தியது இந்த கொடூர விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்கள்.
இதை அடுத்து 200-க்கும் மேற்பட்டவர் காயம் அடைந்ததோடு காரை ஓட்டி சென்றதாக சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது மருத்துவர் ஜெர்மனி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அந்த சவுதி அரேபியாவை சேர்ந்த டாக்டர் தலேப் ஜெர்மனியில் நிரந்தர பிஆர் பெற்றவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜெர்மனியில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு இந்த விபத்தை ஏற்படுத்தி இருக்கும் நபரை கைது செய்து விட்டதாக அந்த நகர மேயர் கூறி இருப்பதோடு வாடகை பிஎம்டபிள்யூ வகை கார் தான் இந்த விபத்தில் பயன்படுத்துவது என்று சொல்லி இருக்கிறார். இந்த மோசமான விபத்தில் ஏழு இந்தியர்கள் காயம் அடைந்து இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து இந்திய வெளியுறத்துறை அமைச்சரகம் இந்த சம்பவம் குறித்து கண்டனத்தை பதிவு செய்துள்ளது காயம் அடைந்த இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததாக தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் விபத்தில் காயமடைந்த இந்தியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களுக்கு என முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்து வருவதாகவும் விஷயங்கள் வெளிவந்துள்ளது.
Summary in English: The recent attack at the German Christmas market has left many in shock, especially with reports that seven Indian nationals were injured. It’s heart-wrenching to see such violence disrupt what should be a joyful time of year. The government has been quick to condemn this act of violence, emphasizing that no one should have to fear for their safety while celebrating the holidays.