ராஜஸ்தான் மாநிலம் ஜெய் சல்மரில் இன்று நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலிங் 55 வது ஆலோசனைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வதை அடுத்து இந்த கூட்டத்தில் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியங்களின் விதி குறைக்கப்படும் ஸ்விக்கி டொமேட்டோ ஆர்டர் செய்யும் போது வசூலிக்கப்படும் வரியை குறைக்க வாய்ப்பு உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறிப்பிட்டு கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது இதன் முக்கிய நோக்கம் மாநில நிதி அமைச்சருடன் ஆலோசனை நடத்தி மக்களின் நன்மைக்காக ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றி அமைப்பது தான்.
அந்த வகையில் ஜிஎஸ்டி கவுன்சிலிங் 55 வது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுவதை அடுத்து இதில் பல மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் இந்த கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் வெளிவர உள்ளது.
இதில் குறிப்பாக ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் மீதான வரியை குறைப்பது குறித்து முடிவு எடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இது ஐந்து சதவீதமாக குறைய வாய்ப்புகள் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டில் விளக்கு நீடிக்கப்படுவது பற்றியும் ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் ஸ்விக்கி,ஜோமேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் தளங்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்படுவதில் 18 சதவீதமாக இருக்கும் வரியை ஐந்து சதமாக குறைக்கலாமா என்ற விவாதமும் செல்ல உள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி கட்டிடம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மின்சார வாகனங்களின் விலை உயரும் அதுபோல அழகு சாதன பொருட்கள் கடிகாரங்கள் காலணிகள் ஹேண்ட் பேக்குகள் லைப் ஸ்டைல் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படலாம் என தெரியவந்துள்ளது.
Summary in English: The 55th GST Council meeting has sparked some interesting discussions, especially when it comes to food delivery platforms like Swiggy and Zomato. If you’ve ever ordered a late-night snack or your favorite meal through these apps, you might be curious about how the GST rate could change for them.