அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி லோக் சபாவை முடக்கக்கூடிய வகையில் இந்திய கூட்டணி போராட்டம் நடத்தியது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்திய கூட்டணிக் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். நேற்று ராஜ்ய சபாவில் பேசிய அமித்ஷா பேஷனுக்காக அம்பேத்கார்.. அம்பேத்கார் என பேசுவதாக கிண்டல் செய்தார்.
இதை அடுத்து இந்த பேச்சுக்கு இன்று அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவித்ததோடு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படத்துடன் இந்தியா கூட்டணி எம்பிகள் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் லோக்சபா கூட்டம் முடங்கியது.
மேலும் ராஜ்ய சபாவில் நேற்று அரசியல் சாசனத்தை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது அம்பேத்கார்.. அம்பேத்கார் என பேசுவது அனைவருக்கும் பேஷன் ஆகிவிட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளை நாமத்தை உச்சரித்தால் சொர்க்கமாவது கிடைக்கும் என்றார்.
அம்பேத்கரின் பெயரை உச்சரிக்கின்ற காங்கிரஸ் கட்சியை பார்த்து பாஜகவிற்கு மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் உண்மையான உணர்வோடு செயல்பட வேண்டும் என்று பேசினார்.
இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கூட்டணி எம்பிகள் அனைவரும் கைகளில் அம்பேத்கார் படங்கள் பிடித்தபடி ஜெய் பீம், ஜெய் பீம் என்று முழக்கம் விட்டார்கள்.
அத்தோடு மத்திய அமைச்சர் அமித்ஷாவே மன்னிப்பு கேள் எனவும் இந்தியா கூட்டணி எம்பிகள் கோஷம் விட்டார்கள் இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, திமுக டி ஆர் பாலு பங்கேற்றார்கள்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூடியது எனினும் இரு சபைகளிலும் அமிர்த்ஷாவுக்கு எதிராக இந்திய கூட்டணி எம்பிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு சபையும் முடங்கியது அதுமட்டுமல்லாமல் லோக்சபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Summary in English: In a recent turn of events, the India bloc MPs have come together to demand an apology from Amit Shah regarding his comments about Dr. B.R. Ambedkar. This has sparked quite the conversation across various platforms, with many people weighing in on the significance of Ambedkar’s legacy and the importance of respecting it.