Instagram பக்கத்தில் நுழைய முடியாமல் பல பயனாளிகள் இன்று பல்வேறு சிக்கல்களை சந்தித்ததாக புகார் அளித்திருக்கிறார்கள் அப்படி உலகம் முழுவதும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் முடங்கியது ஏன் என்பது பற்றிய தகவல்கள்.
உலகம் முழுவதும் இன்று கணினியின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பதை அடுத்து உலகத்தை கைக்குள் கொண்டு வந்திருக்கும் செல்போன்கள் பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இதில் இணையத்தின் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற்று வரும் இன்றைய தலைமுறைகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்தியா உட்பட உலகெங்கிலும் இருக்கும் instagram பக்கமானது இன்று முடங்கியது. இதனை அடுத்து அந்த செயலியின் உள்ளே நுழைய முடியாமல் பலரும் தவித்ததாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த செயலைக்குள் நுழைய பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவதில் கடுமையான இடையூறுகள் ஏற்படுகிறது.
அத்தோடு இன்ஸ்டா கணக்கெட்குள் நுழைய லாகின் முயற்சிகள் தோல்வி அடைவதாக பலரும் பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். சர்வர் இணைப்பு சிக்கல்கள் ஏற்படுவதாக பயனர்கள் புலம்பிச் தள்ளி இருக்கிறார்கள்.
பிரபல சமூக வலைத்தளத்தில் ஏற்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப குறைபாடு கோடிக்கணக்கான பையன்களை ஏமாற்றத்தில் தள்ளி விட்டது.
மேலும் ஆன்லைன் சேவைகளில் ஏற்படும் இடையூறுகளை கண்காணிக்கும் இணையதளமான டவுன் டிடெக்டர் இன்ஸ்டாகிராம் சிக்கல்கள் குறித்து 700 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ளது.
இந்த விஷயமானது நேற்று காலை 10:37 மணியளவில் அதிகளவு புகார்கள் வந்ததை அடுத்து இது ஒரு வாரத்துக்குள் ஏற்பட்டுள்ள இரண்டாவது பெரிய தொழில் நுட்ப பிரச்சனையாக உள்ளது. கடந்த நவம்பர் 13 தேதியும் இது போன்ற ஒரு முடக்க நிலை ஏற்பட்டது.
இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் முழுவதும் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறியுள்ளது.
Summary in English: So, if you’ve been trying to scroll through Instagram lately and found yourself staring at a never-ending loading screen or getting hit with login issues, you’re definitely not alone! Users in India and around the world have been reporting problems accessing their accounts. It seems like Instagram decided to throw a little tantrum, leaving many of us wondering if we should just give up and start reading books again.