Wednesday , 22 January 2025

காடா இல்லை சாஃப்ட்வேர் நிறுவனமா? அம்பானி பையன் 3000 ஏக்கர் சரணாலயம்l!

குஜராத்தில் 3000 ஏக்கர் அளவு வனவிலங்குகளை பராமரித்து வரும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் என்பது எத்தனை பேருக்கு தெரியும் இது குறித்து விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

இந்திய பணக்காரர்களில் முக்கியமான ஒருவராக திகழும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி என்பது சொல்லாமலேயே நீங்கள் சொல்லி விடுவீர்கள். அப்படிப்பட்ட ஆன அம்பானியின் மற்றொரு முகத்தை இனி தெரிந்து கொள்ளலாம். 

ஆனந்த் அம்பானி ஒரு விலங்கு நல ஆர்வலர் என்பது பலருக்கும் தெரியாது அவர் தனது சொந்த செலவில் வனவிலங்குகளுக்கு என மறுவாழ்வு மையத்தை நடத்தி வருகிறார். அப்படிப்பட்ட வனவிலங்கு மறு ஆய்வு மையம் எப்படி இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 

இதற்குக் காரணம் இது ஒரு பிரம்மாண்டமான தனி காடு என்று சொன்னால் நீங்கள் வியப்பின் உச்சிக்கு செல்வீர்கள் அந்த காடு எப்படி இருக்கும் அதன் சிறப்புகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். 

அந்த வகையில் அவர் நடத்திவரும் வனவிலங்கு மறுவாழ்வு மையம் 3000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இதுதான் உலகில் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை மற்றும் விலங்கும் மறுவாழ்வு மையம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? 

இந்த மிருகக்காட்சி சாலை பார்ப்பதற்கு ஒரு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அலுவலகம் போல உள்ளது இதன் பெயர் வான் தார அதாவது வனத்தின் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள். இதனை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் சொந்தமாக ரிலையன்ஸ் அறக்கட்டளையாக நிறுவி உள்ளது. 

குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜாம் நகரில் இது அமைந்துள்ளது. இங்கு விலங்குகள் குளிக்க நீச்சல் குளம், ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், அழகான குகை விலங்குகள் தங்கி ஓய்வெடுக்க கூடிய அறை வனவிலங்குகளுக்கு என்று தனியாக ஸ்பா என பல கோடிகளைக் கொட்டி அம்பானி இதை உருவாக்கி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் இந்த காடுகளில் அடிபட்ட மிருகங்கள் உடல் நலக்குறைவாக தவிக்கும் மிருகங்கள் என அனைத்தையும் கொண்டு வந்து அதிநவீன சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகிறார்கள் குறிப்பாக அழிந்து வரும் வனவிலங்குகள் இந்த சரணாலயத்தில் மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. 

மேலும் இங்கு விதவிதமான மரங்கள் உள்ளது. யானை மான் சிங்கம் புலி சிங்கபால் குரங்கு நீர்யானை சிறுத்தை என 2000 மிருகங்கள் உள்ளது. 43 வகையான ஊர்வன மற்றும் பரப்பன காணப்படுகிறது. 

இவற்றைத் தக்க முறையில் பராமரிக்க நூற்றுக்கணக்கான ஊழியர்கள் உள்ளார்கள் இவற்றுக்கான நல்ல உணவு தரமான வசிப்பிடம் ஆகியவற்றை கொடுத்து மிருகங்களுக்கு ராஜ வாழ்க்கையை கொடுத்து வருகிறார்கள் இந்தியாவில் உள்ள மிருகங்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் ஆதரவற்ற ஜீவராசிகளை அரவணைக்கும் இடமாக இது உள்ளது. 

இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கப்பட்ட இந்த வான்தார தனது வெற்றி பண பயணத்தில் 500-க்கும் மேற்பட்ட யானைகளை பராமரித்து வருகிறது அதுபோல சுவாமி விவேகானந்தரின் கொள்கையான ஜிவ் சேவாவை உயிர் மூச்சாகக் கொண்டுள்ளது. இது போன்ற ஒரு மறுவாழ்வு மையத்திற்கு விதை போட்டவர் ஆனந்த் அம்பானி என்றால் நீங்களும் பாராட்டுவீர்கள். 

Summary in English: So, you’ve probably heard the buzz about Ambani’s son turning a stunning 3-acre sanctuary into what some are calling a “software company.” It’s like mixing a forest with high-tech vibes! Imagine walking through lush greenery, only to find out that right next door is a hub for innovation and coding. It’s wild!

Check Also

வணங்காத எழுத்தாளர்! மேடையிலேயே முதல்வர் பினராயி விஜயனை கண்டித்த எம்.டி வாசுதேவன்..!

It’s a sad day for the literary world as we mourn the loss of veteran Malayalam writer M.T. Vasudevan Nair, who has passed away.