Wednesday , 22 January 2025
election

ஜார்க்கண்ட் முதல் கட்ட தேர்தல்.. ஓட்டு போட மக்கள் ஆர்வமா? இல்லை சுணக்கமா? 

ஜாக்கண்டில் முதல் கட்டமாக 43 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருவதை பற்றி ஒட்டி அது பற்றிய சுவாரசிய தகவல்கள். 

இன்று காலை முதலே ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் இன்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியதை அடுத்து காலை 9 மணி நிலவரம் படி சுமார் 13.03 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய ஆர்வமாக இருக்கின்ற காரணத்தால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க முன்னேற்பாடாக அங்கு பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ‌

இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கிறது. மேலும் முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார்.

இங்கு இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இருகட்ட தேர்தல்கள் நடைபெறும் அதன் பிறகு தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது நவம்பர் 23-ஆம் தேதி வெளியாகும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை பொருத்தவரை மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியைப் பிடிக்க 41 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். 

இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து களம் இறங்கி உள்ளது. 

மேலும் காங்கிரஸ் ஆனது முதல்வர் ஹேமந்தின் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியில் லாலு பிரசாத் யாதவியின் ஆர் ஜே டி கட்சியும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். 

பாஜக கட்சியின் கூட்டணியில் எல்ஜேபி, ஏஜேஎஸ்யூ, ஐஜத போன்ற கட்சிகள் கூட்டணி சேர்ந்ததை அடுத்து 62 தொகுதிகளில் இந்த கட்சிகள் போட்டியிடுகிறது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சியில் களம் இறங்கி செயல்பட்டு வருகிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய தேர்தல் ஆணைய கூற்றுப்படி இன்று முதற்கட்டமான 43 தொகுதிகளுக்கான ஓட்டுப் பதிவு தொடங்கி படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. 

இதில் 17 தொகுதிகள் பொது தொகுதிகளாகவும், ஆறு தொகுதிகள் எஸ் சி தொகுதிகள் ஆக உள்ளது. அத்தோடு 20 தொகுதிகள் பழங்குடியினருக்கான தொகுதிகளாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

காலை 7:00 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவானது மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளதால் நக்சலைட் நடமாடக்கூடிய இடங்களில் 4 மணியோடு ஓட்டுப்பதிவு நிறைவடையும் என்பதை முன்னரே திட்டமிட்டு இருக்கிறார்கள். 

இந்தத் தொகுதியில் மொத்தம் இரண்டு புள்ளி ஆறு கோடி வேட்பாளர்கள் உள்ள நிலையில் ஆண் வாக்காளர்கள் 1.31 கோடி பேராகவும் பெண் வாக்காளர்கள் 1.29  கோடி பேராகவும் இருக்கிறார்கள். 

இந்தத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு செய்ய 15,344 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 1216 வாக்குச்சாவடிகள் கிராமப் புறத்திலும் 2628 வாக்குச்சாவடிகள் நகரப் பகுதிகளும் அமைந்துள்ளது. 

இதில் 1152 வாக்குச் சாகுடிகளை முழுமையாக பெண்களே நிர்வகிக்க இருப்பதாக மாநில தேர்தல் அதிகாரிக்கு ரவிக்குமார் கூறியிருக்கிறார். மேலும் இந்த தேர்தலில் ஆறு கேபினட் அமைச்சர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

Summary in English : Just a quick update on the Jharkhand election polling happening today. As of 10 o’clock this morning, we’ve already seen about 13.04% of votes cast. It’s great to see people getting out there and making their voices heard! Whether you’re a first-time voter or a seasoned pro, every vote counts in shaping the future of our state. So if you haven’t voted yet, make sure to head out and do your part! Let’s keep those numbers rising throughout the day!

Check Also

வணங்காத எழுத்தாளர்! மேடையிலேயே முதல்வர் பினராயி விஜயனை கண்டித்த எம்.டி வாசுதேவன்..!

It’s a sad day for the literary world as we mourn the loss of veteran Malayalam writer M.T. Vasudevan Nair, who has passed away.