மூத்த மலையாள எழுத்தாளரான எம்.டி வாசுதேவன் எந்த அதிகார பீடத்தில் முன்பும் தடை வணங்காத எழுத்தாளர் என சொல்லப்படுபவர். இவர் நேற்று இரவு தனது 91 வது வயதில் காலமானார். அது குறித்த சில விரிவான தகவல்களைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.
மலையாள உலகில் மூத்த மலையாள எழுத்தாளர் என்ற பெருமைக்குரிய எம்டி வாசுதேவன் நாயர் நேற்று டிசம்பர் 25 இரவு தனது 91 வது வயதில் காலம் ஆனார்.
இவருக்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிரசிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.
இவர் தனக்கு பாராட்டு விழா நடந்த சமயத்தில் கேரள முதலமைச்சர் கண்டித்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
மலையாள வாசகர்களால் அதிகளவு கவரப்பட்ட எந்த எழுத்தாளர் இந்தியாவின் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதை பெற்றவர்.
அது மட்டுமல்லாமல் 54 திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள எம்.டி வாசுதேவன் ஏழு படங்களை இயக்கியும் இருக்கிறார். மேலும் சிறந்த திரைக்கதைக்காக நான்கு தேசிய விருதுகளை வென்றெடுத்தவர்.
இவரது இறப்பை இவரது குடும்பம் அறிவித்ததை அடுத்து திரையுலகை சார்ந்தவர்கள், இலக்கியவாதிகள், வாசகங்கள் என பலரும் இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.
இவர் சென்ற ஆண்டு தன்னுடைய 90 வது ஆண்டு விழாவை கேரளா அரசு ஒரு மாநில விழாவாகவே கொண்டாடியதோடு பள்ளிகள் தோறும் அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் முதல்வரின் ஆடம்பரத்தை வெளிப்படுத்த எதை அடுத்து அவர் அதை கண்டித்தார்.
அதுபோலவே மூத்த படைப்பாளிகள், கதகளி கலைஞர்கள் அனைவரின் காலைத் தொட்டு வணங்கும் பணிவு கொண்டவராக விளங்கிய இந்த எழுத்தாளர் எழுத்தாளர்களுக்கு உரிய இலக்கணத்தோடு வாழ்ந்தவர் பல வெற்றிகளை குவித்தவர்.
மேலும் இவர் குறித்து தமிழ் எழுத்தாளர் ஜெகன்மோகன் பல்வேறு வகைகளில் நல்ல விமர்சனத்தை தந்திருப்பதோடு கடந்த ஆண்டு கேரளா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர். முதல்வர் பினராய் விஜயன் பங்கேற்ற விழாவில் அவரை மேடையில் வைத்துக் கொண்டே கடுமையான விமர்சனங்களை பயம் இல்லாமல் பேசியவர்.
இதைத்தொடர்ந்து எம்.டி வாசுதேவன் நாயர் பேசிய பேச்சு முடிந்ததுமே முதல்வர் மேடையில் இருந்து எழுந்து சென்றார். இவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் மறைமுகமாக முதல்வர் பினராய் விஜயனை சுட்டிக்காட்டியதுதான் என்ற விவாதங்கள் எழுந்தது.
இதைத்தொடர்ந்து மாசிஸ்ட் தலைவர்கள் எம்.டி வாசுதேவ நாயர் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று பதில் அளித்த அந்த விஷயங்கள் அன்று கேரளாவில் பேசும் பொருளாக மாறி இருந்தது.
Summary in English: It’s a sad day for the literary world as we mourn the loss of veteran Malayalam writer M.T. Vasudevan Nair, who has passed away. Known for his bold stance against authority, he wasn’t just a writer; he was a voice for the voiceless and an advocate for change. His works often challenged societal norms and pushed boundaries, making readers think critically about the world around them.