பிரதமர் மோடி தற்போது குவைத் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று இருப்பதை அடுத்து 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் குவைத்துக்கு செல்வது இதுவே முதன்முறையாகும். அந்த நாட்டின் உயரிய விருதான தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது தற்போது மோடிக்கு வழங்கப்பட உள்ளது அது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவிற்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு நீடித்து வந்தது. அந்த வகையில் தான் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான இந்தியர்கள் பல ஆண்டுகள் அந்த பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் மத்திய கிழக்கு நாடுகளாக இருக்கும் ஐக்கிய அமீரகம் சவுதி, ஓமன், கத்தார் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்கனவே மோடி பலமுறை சென்றிருக்கிறார். ஆனால் குவைத் நாட்டிற்கு மட்டும் இது வரை மோடி சென்றதில்லை.
உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்படும் குவைத்தில் கணிசமான அளவு இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அதாவது அந்த நாட்டின் மக்கள் தொகை 43 லட்சமாக இருக்கும் நிலையில் சுமார் 10 இலட்சம் பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அளவு இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் வசிக்கும் நாடாக இருந்தாலும் மோடி இதுவரை குவைத்துக்கு சென்றதே இல்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் குவைத் செல்ல இருந்தது. உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் கடைசி நேரத்தில் கொரோனா காரணத்தால் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் நடந்த ஐநா கூட்டத்தில் பிரதமர் மோடி வயது இளவரசி இளவரசர் சேக் சபா காலிதை சந்தித்து பேசினார். இதனை அடுத்து குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அரசு முறை பயணமாக இந்தியா வந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் மோடியிடம் தங்கள் நாட்டிற்கு வருமாறு அழைப்பை விடுத்ததை அடுத்து பிரதமர் முகமது சபா அல் சலீமின் எழுதிய கடிதம் அளிக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று மோடி குவைத் சென்றிருக்கிறார்.
இரண்டு நாள் பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடியை அந்த நாட்டின் துணை பிரதமர் சேக் பகத் யூசப் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். இந்திரா காந்திக்கு பிறகு வைத்து சென்ற இந்திய பிரதமராக மோடி விளக்குகிறார். அதாவது 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் தற்போது குவைத் சென்று இருக்கிறார்.
இதனை அடுத்து குவைத்தின் உயரிய விருதான தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் விருது என்ற பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது. உலக நாடுகள் மூலம் 20 வது விருதை பிரதமர் மோடி பெறுகிறார். இதை அடுத்து பிரதமருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Summary in English: Recently, Prime Minister Narendra Modi made headlines during his visit to Kuwait, where he was honored with the nation’s highest accolade, the Order of Mubarak Al Kabeer. This prestigious award is a testament to the strong ties between India and Kuwait and highlights Modi’s efforts in fostering international relationships.