Wednesday , 22 January 2025

கோழி கழுத்தில் குவிக்கப்படும் ட்ரோன்.. இந்தியாவை தாக்குமா வங்கதேசம்!!

இந்தியாவோடு மோதல் போக்கை ஏற்படுத்தக் கூடிய வகையில் வங்கதேசத்தின் போக்கு அண்மைக்காலமாக நிலவி வருகிறது. அதற்கு உரிய பதிலியை நம் நாடு கொடுக்குமா என்பது பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

ஏற்கனவே வங்க தேசத்தில் இந்துக்களுக்கு எதிரான விஷயங்கள் நடந்து வருவதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதை அடுத்து தற்போது நம் நாட்டு எல்லையான கோழி குவித்து பகுதியில் வங்கதேசத்தினர் துருக்கியில் தயாரிக்கப்பட்ட உளவு
ட்ரோன்களை குவித்து வருகிறார்கள். 

இதை அடுத்து எல்லைப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தவரை அந்த நாடு நம்முடன் நல்ல நட்பு முறையில் இருந்தது. இதை அடுத்து அங்கு நடந்த இட ஒதுக்கீட்டு வன்முறையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். 

இதனை அடுத்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டு அந்த அரசுக்கு நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யுனிஸ் பொறுப்பு ஏற்று இருக்கிறார். இவர் என்று பொறுப்பு ஏற்றாரோ அன்றிலிருந்து இன்று வரை இரண்டு நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவு பாதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முக்கிய காரணமே வங்கதேசத்தில் சிறுபான்மையருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் இரண்டு நாட்டின் உறவில் விரிசலை அதிகரித்து உள்ளது.மேலும் தற்போது நம் நாட்டோடு மோதலில் ஈடுபடக்கூடிய வகையில் எல்லையில் வங்கதேச உணவு ட்ரோன்களை பயன்படுத்த துவங்கியுள்ளது. 

வங்கதேசம் தனது எல்லையை நம் நாட்டுடன் தான் 94 சதவீதம் வரை பகிர்ந்துள்ளது அதாவது இந்தியாவும் வங்கதேசம் இடையே மொத்தம் 496 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லை பகுதி பறந்து விரிந்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக 2217 கிலோ மீட்டர் எல்லையை வங்கதேசம் பகிர்ந்து இருக்கிறது இது தவிர வடகிழக்கு மாநிலங்களுடன் வங்கதேசத்தின் எல்லை உள்ளது அதாவது அஸ்ஸாம் திருவிழா மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் இதன் எல்லை பகிர்வு உள்ளது. 

இதில் முக்கிய பகுதியாக விளங்கும் கோழிக்கழுத்து பகுதியானது நம் நாட்டின் பிற வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் பகுதியாக திகழ்கிறது இது மேற்கு வங்கத்தின் சிலி குரி கடரிடாரில் உள்ளது.

இதனை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும் என்றால் வடகிழக்கு மாநிலங்களான மேற்குவங்கம் வழியாக நம் நாட்டை இணைக்கும் பகுதிதான் இந்த கோடிக்கழுத்துப் பகுதி. மேப்பில் இந்த இடத்தை பார்த்தால் கோழியின் கழுத்து போல் இருப்பதால் இதற்கு கோழி கழுத்து பகுதி என்ற பெயர் ஏற்பட்டது. 

எந்த பகுதியில் வங்கதேசத்தின் எல்லை உள்ளது இந்நிலையில் தற்போது வங்கதேச உணவு ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இது துருக்கி நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு நவீன வசதிகளை கொண்ட Bayraktar TB 2 வகை துரோண்களை கொண்டு உலவு பார்க்க ஆரம்பித்துள்ளது. 

துருக்கி நாட்டின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நிறுவனத்தினால் உண்டாக்கப்பட்டிருக்கும் இந்த ட்ரோன்கள் மேல் வகை அதாவது மீடியம் ஆட்டிட்யூட் லாங் அட்ரஸ் வகையாகும். இந்த ட்ரோன்களை ரிமோட் மட்டுமல்லாமல் தன்னிச்சையாகவும் இயக்க முடியும். 

இந்த ட்ரோன்கள் 300 கிலோ மீட்டர் சுற்றளவில் 24 மணி நேரம் தொடர்ந்து பறக்க வைக்க முடியும் மேலும் இது அமெரிக்காவில் பயன்பாட்டில் இருக்கும் எம் கியூ 9 ரிப்பர் ட்ரோனை விட எட்டு மடங்கு எடை குறைவானது அத்தோடு மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும். 

இந்த ட்ரோன்கள் மூலம் நவீன போர் முறை தாக்குதலான லேசர் வழிகாட்டுதலின் மூலம் ஏவுகணையை நடத்தும் தாக்குதலை இது மேற்கொள்ளக்கூடிய திறன் கொண்டது எனவே இந்த வகை ட்ரோனை வைத்து பாகிஸ்தான் நமக்கு குடைச்சல் கொடுக்கும் நிலையில் தற்போது வங்கதேசமும் நம்மை சீண்டி பார்க்கிறது. 

இதை அடுத்து வங்கதேசத்திற்கு பாடம் புகட்டக்கூடிய வகையில் வங்கதேசம் உளவு பார்க்கும் இடத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் உள்ள எல்லையில் மத்திய அரசும் ரோல்களை குவித்து வருகிறது இந்த ட்ரோன்கள் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட ட்ரோன்கள் ஆகும். 

இது தவிர இஸ்ரேல் நாட்டின் தயாரிப்பான ஹெரான் டிபி வகை ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன ட்ரோன்களை இந்தியா நிலை நிறுத்தி கண்காணிப்பு பணியை செய்ய ஆரம்பித்துவிட்டது இதில் இந்த ட்ரோன் 45,000 அடி உயரத்தில் பறந்து எல்லை கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் அனைத்து காலநிலைகளிலும் 30 மணி நேரம் வரை இந்த ட்ரோன் சிறப்பாக செயல்பட முடியும். 

இதனால் இந்தியா மற்றும் வங்கதேச எல்லையில் பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது என்பதை நாம் குறிப்பாக உணர்ந்து கொள்ள வேண்டும். 

Summary in English: In a surprising twist, Prime Minister Modi has taken a significant step following the recent deployment of the Bayraktar TB2 drone by Bangladesh near the Indian border, specifically around the Chicken Neck area. This move has stirred up quite a buzz in both political and military circles.

Check Also

வணங்காத எழுத்தாளர்! மேடையிலேயே முதல்வர் பினராயி விஜயனை கண்டித்த எம்.டி வாசுதேவன்..!

It’s a sad day for the literary world as we mourn the loss of veteran Malayalam writer M.T. Vasudevan Nair, who has passed away.