ஆந்திரா விசாகப்பட்டணத்தில் மின்சாரப் பொருட்கள் இருப்பதாக கூறி ஒரு பெண்ணுக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்சல் ஆண் சடலம் வந்ததை அடுத்து அது ஆருடையது என்ற விசாரணை அதிதீவமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆந்திராவே தற்போது அரண்டு இருக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் டெலிவரி செய்யப்பட்ட பெண்ணின் பார்சலில் இருந்த சடலத்தோடு ஒரு மிரட்டல் கடிதத்தில் போலீசாருக்கு துப்பு கிடைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எந்த கண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாக துளசி வீடு கட்டி வரும் இவருக்கு சத்திரிய சேவா சமிதி என்ற அமைப்பினர் உதவி இருக்கிறார்கள்.
இந்நிலையில் நாக துளசியின் விண்ணப்பத்தை ஏற்று வீட்டு கட்டுமான பொருட்களை வணங்கி இருக்கக்கூடிய அந்த சமிதி அவர்களுக்கு தேவையான பேன், லைட் உள்ளிட்ட மின்சார பொருட்களை பார்சலில் அனுப்பியுள்ளதாக போனில் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் நேற்று முன் இரவு நாகா துளசியின் வீடு தேடி ஒரு பார்சல் வந்தது அதில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது அந்த நபர் மின்சார பொருட்கள் இருப்பதாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார் பார்சலை பிரித்துப் பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
இதற்குக் காரணம் மின்சார பொருட்களுக்கு பதிலாக 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது அதில் ஒரு கடிதமும் இருந்தது அதில் 1.3 கோடி கேட்டு மிரட்டப்பட்டு இருந்தது பணத்தை கொடுக்க தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்து போலீசில் புகார் கொடுக்க போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் இதை அடுத்து நாக துளசி மற்றும் அவர் குடும்பத்தாரிடமும் சத்திரிய சேவா அமைப்பினரும் விசாரணை நடந்துள்ளது.
மேலும் பார்சல் கொண்டு வந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சடலம் குறித்து முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகி இருக்கலாம் மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு நாகதுளசியின் கணவர் காணாமல் போயிருக்கிறார்.
அத்தோடு அவர் வாங்கிய மூன்று லட்சம் கடனை வட்டியோடு கொடுக்க வேண்டும் என்று கடிதத்தில் விரட்டப்பட்டிருந்த நிலையில் இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அத்தோடு இந்த பார்சல் எங்கிருந்து வந்தது இதைக் கொண்டு வந்த நபர் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் நாக துளசியின் கணவர் யாரிடம் கடன் வாங்கினார் என்பது குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருவதை அடுத்து இது முக்கியத்துவப்பாக இந்த வழக்கில் இருக்கும் என போலீசார் கருதுகிறார்கள்.
Summary in English: In a bizarre turn of events that sounds straight out of a crime thriller, a woman recently received a parcel containing what turned out to be a rotten dead body. Yep, you read that right! This shocking discovery has sparked an intense police investigation as authorities scramble to piece together how such a gruesome package ended up in her hands.