Wednesday , 22 January 2025
Draupadi Murmu

ஜனாதிபதி திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக நீலகிரி.. ஊட்டி தாண்டா நிகழ்ச்சியின் ஹைலைட்டே..

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நான்கு நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்க கூடிய விஷயம். 

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி மொர்மோ இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை வந்ததை அடுத்து சுமார் 4 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளி வந்ததை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

டெல்லியில் இருந்து இன்று காலை விமான மூலம் கோவை விமான நிலையம் வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சென்று இருக்கிறார். 

அங்கு குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர் உதகை ஆளுநர் மாளிகையில் பழங்குடியின பெண்களோடு உரையாடல் நிகழ்த்த இருக்கிறார்.

மேலும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சுமார் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகம் வந்திருக்கும் இவரை அனைவரும் வரவேற்று இருக்கிறார்கள். 

நவம்பர் 28-ஆம் தேதி நாளைக்கு கார் மூலம் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடிய இவருக்கு ராணுவ மரியாதை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியை அடுத்து வெள்ளிக்கிழமை ஊட்டி ராஜ் பவனில் நீலகிரியில் பழங்குடியின மக்களோடு படுகர் இன மக்களையும் சந்தித்து பேச இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் நவம்பர் 30-ஆம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு சென்று அங்கிருந்து விமான மூலம் திருச்சி சென்று பின்னர் திருவாரூர் செல்லும் குடியரசு தலைவர் அங்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஒன்பதாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். 

Summary in English: Today marks an exciting day as President Draupadi Murmu kicks off her four-day visit to the stunning Nilgiris! Nestled in the hills of Tamil Nadu, this region is known for its breathtaking landscapes and cool climate. During her visit, she’s expected to engage with local communities and explore the rich cultural heritage of the area.

Check Also

வணங்காத எழுத்தாளர்! மேடையிலேயே முதல்வர் பினராயி விஜயனை கண்டித்த எம்.டி வாசுதேவன்..!

It’s a sad day for the literary world as we mourn the loss of veteran Malayalam writer M.T. Vasudevan Nair, who has passed away.