தாராவி குடிசை மேம்பாட்டு திட்டத்தை பெற உத்தவ் தாக்கரே அரசை தவிர்க்க அதானி முக்கிய பங்கு வகித்தார் என ராகுல் கூறி இருப்பது.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிரமான பிரச்சாரம் நடைபெற்று வரக்கூடிய வேளையில் இன்னும் மூன்று நாட்களில் பிரச்சாரம் முடியக்கூடிய நிலையில் சூடு பிடித்துள்ளது அரசியல் களம்.
இங்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, பாஜக தலைவர் ஜே பி நட்டா, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே போன்ற தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரிக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறார்கள்.
இதில் ராகுல் காந்தி வடக்கு மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடாவில் தொடர்ச்சியாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் நாண்டெட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது தாராவி குடிசை மேம்பாட்டு திட்டத்தை பெற உத்தவ் தாக்குரே அரசை கவிழ்ப்பதில் கௌதம் முக்கிய பங்கு வகித்தார் என்ற அதிர்ச்சியை பதிவு செய்தார்.
மேலும் உங்களது அரசு திருடப்பட்டது பிடுங்கப்பட்டது இதை நரேந்திர மோடிக்கு தொடர்பு இல்லை என்று நினைத்தால் அது முட்டாள் தனம். அத்தோடு அரசியல் கூட்டத்தில் அதானி எதற்காக பங்கேற்க வேண்டும்.
அதானி திட்டத்தை பெற வேண்டும் என்பதற்காகத்தான் டெல்லியில் நடந்த அரசியல் கூட்டத்தில் பங்கேற்றார் என்று விஷயத்தை புட்டு புட்டு வைத்தார்.
மேலும் மோடி ஒரு கோடி மதிப்பிலான தாராவி நிலத்தை அதானிக்கு கொடுக்க நினைத்திருக்கிறார் அத்தோடு தொழிலதிபர்கள் வாங்கிய 16 லட்சம் கோடி கடனையும் தள்ளுபடி செய்திருக்கிறார் என மோடியின் மீது குற்றம் சுமத்தினார்.
அது மட்டுமல்லாமல் நான் தேர்தல் பிரச்சாரத்தில் சிவப்பு நிற அரசியல் சாசன நகலை வைத்திருப்பதாக மோடி குற்றம் சாட்டியிருக்கிறார் புத்தகத்துக்குள் எதுவும் இல்லை என்று சொல்லுகிறார் புத்தகத்தின் நிறம் முக்கியமில்லை என்பதை நான் அவருக்கு குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.
மேலும் நமது பிரதமர் இந்திய அரசியலமைப்பை படிக்காததால் தான் புத்தகம் காலியாக இருப்பதாக நினைக்கிறார். அவர் இந்திய அரசியல் சாசனத்தை ஒருபோதும் படிக்காததால் அதில் என்ன இருக்கிறது என்று அவருக்கே தெரியவில்லை.
ஆனால் இந்த சாசனத்தில் பெருசா முண்டா, கௌதம புத்தர், டாக்டர் பீமாராவ் அம்பேத்கார், மகாத்மா பூலே மற்றும் மகாத்மா காந்தி போன்ற சிறந்த தலைவர்களின் எண்ணங்கள் உள்ளது.
எனவே இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் என்பது இந்தியாவின் ஆன்மா என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து புத்தகம் காலியாக உள்ளது என்று கூறுவதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.
குறிப்பாக பழங்குடி மக்களை பாஜகவும் ஆர்எஸ்எஸும் வனவாசிகள் என்று தான் கூறுகிறார்கள். பழங்குடியினர் நீர், வனம் நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் என்று ராகுல் தெரிவித்தார்.
இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.
Summary in English: Recently, Rahul Gandhi took to the stage to voice some strong opinions about Prime Minister Modi and the ongoing Dharavi land issue. He didn’t hold back, claiming that Modi ji is ready to hand over valuable land in Dharavi to the Adani group. This has sparked a lot of chatter among folks who are concerned about what this means for local communities.